385/5.. 408க்கு ஆல்-அவுட்; சொதப்பல் என்றாலே அது பாகிஸ்தான் அணி தான் என்பதை மீண்டும் நிரூபித்த பாகிஸ்தான்!

0
161

கடைசி 5 விக்கெட்டுகளை 23 ரன்களுக்கு இழந்தது சொதப்பியுள்ளது பாகிஸ்தான் அணி.

பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதிவரும் 2வது டெஸ்ட் கராச்சி மைதானத்தில் நடக்கிறது. நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

நியூசிலாந்து அணிக்கு துவக்க வீரர்கள் டெவான் கான்வெ(122) மற்றும் டாம் லேத்தம்(71) இருவரும் அபாரமாக விளையாடி ரன்களை சேர்ந்தனர். விக்கெட் கீப்பர் டாம் பிலண்டல்(51) மற்றும் பந்துவீச்சாளர் மேட் ஹென்றி(68) இருவரும் அரைசதம் அடிக்க நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 449 ரன்கள் அடித்தது.

அடுத்ததாக முதல் இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு இம்ரான் உல் ஹக் 83 ரன்கள் மற்றும் சர்ப்ராஸ் அகமத் 78 ரன்கள் அடித்தனர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் போராடிய சவுத் சக்கில் 125 ரன்கள் அடித்திருந்தார். இதில் பாகிஸ்தான் அணி 408 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஒரு கட்டத்தில் 384 ரன்கள் வரை ஐந்து நான்கு விக்கெட்டுகளை மட்டுமே பாகிஸ்தான் அணி இழந்திருந்தது. எளிதாக நியூசிலாந்து அணியின் ஸ்கோரை கடந்து நல்ல லீடிங் வைப்பார்கள், அதன் மூலம் நியூசிலாந்து அணியை கட்டுப்படுத்தி எளிதாக இந்த போட்டியில் வெல்வதற்கு பாகிஸ்தான் அணி முயற்சிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வழக்கம் போல கடைசி நேரத்தில் சோதப்பலாக விளையாடி 385/5 ல் இருந்து 408 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியுள்ளது. பாகிஸ்தான் அணி கடைசி 23 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டது.

பாகிஸ்தான் அணி 41 ரன்கள் நியூசிலாந்து அணியை விட பின்தங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது. டெவான் கான்வெ முதல் பந்திலையே ஆட்டம் இழந்தார். கென் வில்லியம்சன் மற்றும் டாம் லேத்தம் இருவரும் விளையாடி வருகின்றனர்.

நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது, 79 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்து 120 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது நியூசிலாந்து அணி.