வேண்டியவர்களுக்கு மட்டும் அணியில் வாய்ப்பு.. முன்னாள் பாக் வீரர் பகிரங்க குற்றச்சாட்டு

0
93

வேண்டியவர்களுக்கு மட்டுமே அணியில் வாய்ப்பு கிடைப்பதாக பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் வகாப் ரியாஸ் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் அணிக்காக கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடியவர் வகாப் ரியாஸ் தற்போது பாகிஸ்தான் அணிக்கு திரும்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் வகாப் ரியாஸ் பஞ்சாப் மாகாணத்தின் விளையாட்டு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தேர்வு குழு உறுப்பினர்களை கடுமையாக சாடி உள்ளார். இதற்கு முன்பு தேர்வு குழு தலைவராக இருந்த முகமது வசீம் ஒரு லேப்டாப் தேர்வு குழு தலைவராகவே செயல்பட்டார். திறமையான வீரர்களாக அறியப்பட்ட இமாத் வசீம், சோயிப் மாலிக் மற்றும் சர்பிராஸ் அகமதை அணியில் சேர்க்கப்படாத குறித்து தேர்வுக்குழு தலைவர் முஹம்மது வசிமிடம் எந்த நியாயமான காரணமும் கிடையாது.

சோயிப் மாலிக்  மற்றும் இமாத் வடீம் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால் அவர்கள் விளையாடிய தகவல் குறித்து முஹம்மது வசிமின் லேப்டாப்பில் வரவில்லை என நினைக்கிறேன். அவர்களை ஏன் டி20 உலக கோப்பையில் சேர்க்கவில்லை. அதனால் தான் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. வயதை காரணம் காட்டி வீரர்களை தேர்வு செய்யவில்லை என்று சொன்னால் அதனை அனைத்து வீரர்களுக்கும் பொதுவான விதியாக தானே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் பாகிஸ்தான் அணியில் தமக்கு வேண்டியவர்களை மட்டும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கினார்கள். அணி தேர்வு செய்து பிறகு பலரிடம் கருத்து கேட்கப்படும். ஆனால் முகமது வசீம்,  ரமேஷ் ராஜா ஆகியோரெல்லாம் தங்களுடைய கருத்துக்கு யார் ஆமாம் என்று சொல்வார்களோ அவர்களிடம் மட்டுமே ஆலோசனை நடத்தினார்கள். பல திறமையான வீரர்கள் பாகிஸ்தான் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டிருக்கிறார்கள். இதனாலையே அணி முக்கிய போட்டிகளில் தோல்வி தழுவியது என்று வகாப் ரியாஸ் கூறியுள்ளார்.

- Advertisement -