மிக்கி ஆர்த்தர் மற்றும் வக்கார் யூனிஸ் தனக்குச் செய்ததை அனைவர் முன்னிலையிலும் போட்டுடைத்த பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல்

0
95

பாகிஸ்தானைச் சேர்ந்த பேட்ஸ்மேன் உமர் அக்மல் தனது சகோதரர்கள் அட்னான் அக்மல் மற்றும் கமரன் அக்மல் போன்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து விளையாட ஆரம்பித்தார். 2009 முதல் பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார்.

தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியிலேயே நியூசிலாந்து அணிக்கு எதிராக சதம் அடித்த வீரர். அதேபோல ஒரு நாள் போட்டிகளிலும் முதல் மூன்று போட்டியின் முடிவிலேயே தன்னுடைய முதல் ஒருநாள் சதத்தை எட்டிய வீரர். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த அவர் அதன் பின்னர் சற்று சுமாராக விளையாட ஆரம்பித்தார். அதன் காரணமாக அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

2019ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தற்போது வரை பாகிஸ்தான் அணியில் அவர் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது. தான் பாகிஸ்தான் அணியில் இடம்பெறாத காரணம் குறித்து தற்போது உமர் அக்மல் நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மிக்கி ஆர்த்தருக்கு என் மீது தனிப்பட்ட வகையில் பகைமை இருக்கிறது

மிக்கி ஆர்தருக்கு என்னுடன் தனிப்பட்ட பிரச்சனைகள் இருந்தன.ஆனால் அந்த நேரத்தில் அணி நிர்வாகம் எனக்காக குரல் கொடுக்கவில்லை, இன்று வரை அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். இருப்பினும், மிக்கி ஆர்தர் பின்னர் அதை(மிக்கி ஆர்தர் என் மீது கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியதை) அவரே ஒப்புக்கொண்டார்.எனக்கு அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு இது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. ஒவ்வொரு முறையும் நான் புறக்கணிக்கப்பட்டேன் என்று உமர் அக்மல் தற்பொழுது வேதனை தெரிவித்துள்ளார்.

மிக்கி ஆர்த்தர் கொடுத்த விளக்கம்

பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து 2019ஆம் ஆண்டு விலகிக்கொண்டார். அவர் அப்போது உமர் அக்மல் சற்று ஆணவமாக நடந்து கொள்வார் என்றும் முறையான ஃபிட்னசை அவர் கடை பிடிக்க மாட்டார் என்றும் கூறியிருந்தார்.

தற்பொழுது உமர் அக்மல் அவ்வாறு மிக்கி ஆர்த்தர் குறித்து கூறியதை பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் தொகுப்பாளர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் கணக்கில் பதிவு செய்திருந்தார். அந்த பதிவுக்கு மிக்கி ஆர்த்தர் தனது பதிலை எதிர் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.

“கண்ணாடியைப் பாருங்கள் உமர் அக்மல்” என்று அவர் பதில் ட்வீட் செய்திருந்தார். அதாவது இவை அனைத்தும் அவரின் பால் அதாவது அவராலேயே நடந்த நிகழ்வு என்றும், இதில் மற்றவர்களை குறை கூறுவதில் ஒன்றும் இல்லை என்பது போல அவர் அந்த பதிலை தெரிவித்திருக்கிறார்.

வக்கார் யூனிஸ் என்ன நினைக்கிறார் என்று எனக்கு புரியவில்லை

2016 ஆம் ஆண்டு உலகக் கோப்பை டி20 தொடர் நடந்து கொண்டிருக்கையில் நான் மூன்றாவது இடத்தில் விளையாட வேண்டினேன். அப்பொழுது எங்கள் அணிக்கு வக்கார் யூனிஸ் தலைமை பயிற்சியாளராக இருந்தார்.

இது சம்பந்தமாக நான் அப்பொழுது இம்ரான்கான் இடம் பேசினேன்.” இம்ரான்கான் தனிப்பட்ட வகையில் நான் ஏன் டாப் ஆர்டரில் விளையாடவில்லை என்று வக்கார் யூனிஸ் இடம் தனிப்பட்ட வகையில் கூட கேள்வி கேட்டார். வக்கார் யூனிஸ் ஒரு தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஆனால் ஒரு பயிற்சியாளராக அவரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று உமர் அக்மல் வேதனை தெரிவித்துள்ளார்.