மருத்துவமனையில் ஷாகின் ஆப்ரிடிக்கு அறுவை சிகிச்சை.. டிவிட்டரில் உருக்கம்

0
189

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேக பந்துவீச்சாளர் ஷாகின் ஆப்ரிடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது அபார பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களை நடுங்க வைக்கும் ஷாகின் ஆப்ரிடி ஆகஸ்ட் மாதம் காயம் காரணமாக ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது .

- Advertisement -

இதனை அடுத்து உலகக் கோப்பை தகுதி பெற்று விட வேண்டும் என கடும் பயிற்சி மேற்கொண்ட ஷாகின் ஆப்ரிடி நினைத்தபடி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலககோப்பையில் விளையாடினார். ஆனால் முதல் மூன்று போட்டிகள் தனது இயல்பான பந்துவீச்சை வெளிப்படுத்த முடியாமல் திணற பாகிஸ்தான் அணியும் தடுமாறியது.எனினும் தனது நம்பிக்கையை கைவிடாமல் தொடர்ந்து பயிற்சி செய்த ஷாகின் ஆப்ரிடி டி20 உலக கோப்பையில் 11 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

Shaheen Afridi

ஆப்ரிடி ஃபார்முக்கு திரும்பிய போது தான் பாகிஸ்தான் தொடர்ந்து வெற்றிகளை பெற்றது. இந்த நிலையில் தான் இங்கிலாந்துக்கு எதிரான இறுதி போட்டியில் முக்கிய கட்டத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் கடைசி இரண்டு ஓவர் வீச முடியாத நிலை ஏற்பட்டது. இது ஆட்டத்தில் பெரு திருப்புமுனை ஏற்படுத்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ஷாகின் ஆப்ரிடி ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

- Advertisement -

அங்கு அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவருக்கு காலில் காயும் ஏற்படவில்லை என்றும் கால் மடங்கியதால் ஏற்பட்ட வலியால் தான் அவர் போட்டியில் தொடர முடியவில்லை என்றும் தெரியவந்தது. இதனை அடுத்து இரண்டு வாரம் ஓய்வில் இருக்க வேண்டும் என கூறப்பட்டது. அதன் பிறகு பாகிஸ்தான் வந்த ஷாகின் ஆப்ரிடி, தனது காலில் வலுவை அதிகரிக்க பயிற்சி செய்ய திட்டமிட்டு வந்தார்.

இந்த நிலையில் தான் அவருக்கு மேலும் ஒரு பிரச்சனை வந்தது. திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. இஸ்லாமாபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு ஷாகின் ஆப்ரிடி அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு எடுத்த ஸ்கேனில் அவருக்கு அப்பண்டிக்ஸ் பிரச்சனை இருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது .இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஷாகின், தமக்கு அப்பெண்டிக்ஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாகவும், உங்களுடைய பிரார்த்தனையில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

அறுவை சிகிச்சை காரணமாக அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் ஆறு வாரம் சிகிச்சையில் இருக்கும் படி மருத்துவர்கள் கூறியுள்ளதால் இனி ஷாகின் ஆப்ரிடி மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தான் கிரிக்கெட் போட்டிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.