ஷாகின் அப்ரிடி இல்லை.. ஆனால் இவர் மிரட்டுவாரு.. பாகிஸ்தான் பயிற்சியாளர் கருத்து

0
75
Asiacup 2022

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தங்களது கடைசி கட்ட தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் கோப்பையை எப்படியாவது வென்று விடலாம் என்று நினைத்த பாகிஸ்தானுக்கு ஷாகின்ஷா அப்ரீடியின் விலகல் பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் அந்த அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் பாகிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிட கூடாது என்று பல்வேறு கிரிக்கெட் விமர்சனங்களும் கூறியுள்ளனர்.

- Advertisement -

இந்த நிலையில் செய்தியாளிடம் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஷக்லின் முஸ்தாக், ஷாகின் அப்ரிடி காயம் காரணமாக விலகி இருப்பது தங்களது அணிக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னாடி உள்ளது என்று கூறினார். எனினும் தங்களது அணியில் திறமை வாய்ந்த இளம் வேகபந்துவீச்சாளர்கள் பலரும் இருப்பதால் அவர்கள் வெற்றியை தேடி தருவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். குறிப்பாக 20 வயது வீரரான நஷிம்ஷா சிறப்பாக செயல்பட்டு தங்களுக்கு வெற்றி தேடி தருவார் என ஷக்ளின் முஸ்தாக் நம்பிக்கை தெரிவித்தார். நசிம் ஷா மேகப்பந்து வீச்சு நட்சத்திரமாக வளம் வருவார் எனும் அவர் கூறினார்.

பாகிஸ்தான அணி பேட்டிங் மற்றும் பில்டிங்கில் நல்ல நிலையில் இருப்பதாக குறிப்பிட்ட முஸ்தாக், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அனுபவம் மட்டுமே இல்லை தவிர திறமையும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பும் இருப்பதாக கூறினார்.ஒரு வீரர் சிறப்பாக செயல்படுவாரா மாட்டாரா என்பது சூழலை பொறுத்து அமையும்.

ஆனால் அவர் எப்படி தன்னை தயார் படுத்திக் கொள்கிறார், வெற்றி பெற எவ்வளவு முனைப்பு காட்டுகிறார், போட்டிக்காக எப்படி பயிற்சி மேற்கொள்கிறார் என்பது மட்டுமே வீரர்களிடமிருந்து தாம் எதிர்பார்ப்பதாக பயிற்சியாளர் முஸ்தாக் கூறினார். பாகிஸ்தான அணி வரும் 28ஆம் தேதி தனது முதல் போட்டியில் இந்தியாவுடன் பலபட்ச நடத்துகிறது .ஆசிய கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் அதிகபட்சமாக மூன்று முறை மோத வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -