இந்திய கிரிக்கெட்

எங்க பாகிஸ்தான் பைனலில் இதை நிச்சயம் செய்யும்.. அந்த 2 பேருக்கு குறி வைக்கணும் – வாசிம் அக்ரம் விருப்பம்

நடப்பு ஆசியக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக அமையும் என வாசிம் அக்ரம் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற இருக்கிறது. ஆசியக் கோப்பை வரலாற்றில் இரண்டு அணிகளும் முதல் முறையாக இறுதிப் போட்டியில் மோதிக் கொள்கின்றன.

பாகிஸ்தான் அணியின் பலவீனம்

பாகிஸ்தான அணிக்கு பேட்டிங் மிகவும் பலவீனமாக இருக்கிறது. தொடக்க வீரர் பைம் அயூப் இதுவரையில் ஆறு போட்டிகளில் நான்கு டக் அவுட் ஆகியிருக்கிறார். மொத்தமாக அவர் இதுவரையில் 23 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். மேலும் அவர்களின் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில் யாரும் இதுவரையில் பெரிதாக ஜொலிக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர் பர்கான் மட்டுமே இந்திய அணிக்கு எதிராக நம்பிக்கை தந்தார்.

அதே சமயத்தில் தற்போது ஓரளவுக்கு பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கிறது. சுழல் பந்துவீச்சுக்கு நான்கு பேர் இருக்கும் நிலையில், வேகப்பந்துவீச்சாளர்களாக இடம் பெற்று இருக்கும் மூவரில் இருவர் ஆல்ரவுண்டர்களாக இருப்பது பாகிஸ்தான் பேட்டிங் வரிசையை ஆழமானதாக மாற்றுகிறது. எனவே பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுதான் இந்திய அணிக்கு எதிராக வெல்ல இருக்கும் ஒரே வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நான் நம்புகிறேன்

இது குறித்து வாசிம் அக்ரம் பேசும் பொழுது “இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமையும் என நான் நம்புகிறேன். இந்த போட்டியில் நிச்சயமாக இந்திய அணிதான் ஃபேவரைட் ஆக இருக்கிறது. ஆனால் நாம் எல்லோருமே பார்த்திருக்கிறோம் இந்த வடிவத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஒரு நல்ல இன்னிங்ஸ் இல்லை ஒரு நல்ல ஸ்பெல் ஆட்டத்தையே மாற்றி விடலாம். பாகிஸ்தான அணி இந்த நம்பிக்கையையும் உத்வேகத்தையும் எடுத்துக்கொண்டு இன்று வரவேண்டும். மேலும் தங்களை தாங்களே ஆதரித்து விவேகமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும்”

இதையும் படிங்க : இந்திய அணி என்ன வேணா செய்யட்டும்.. ஆனா நாங்க இத செஞ்சு சாம்பியன் ஆவோம் – சல்மான் அலி ஆகா பேச்சு

“பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பத்தில் சிறப்பாக அமைவதற்கு முக்கியமாக அபிஷேக் மற்றும் கில் இருவரின் விக்கட்டுகளை சீக்கிரத்தில் கைப்பற்ற வேண்டும். இந்தியாவை இது நிச்சயம் பின்னுக்கு தள்ளும். மேலும் போட்டி மிகவும் நெருக்கமாக இருக்கும். சிறப்பாக விளையாடும் அணி வெற்றி பெறும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by