தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய பாகிஸ்தான்; இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றதா?

0
760

தென்னாப்பிரிக்காவை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டக்-வோர்த் லூயிஸ் முறைப்படி வெற்றி பெற்றுள்ளது பாகிஸ்தான் அணி.

எட்டாவது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றின் 36 வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றால் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று விடும். அதே நேரம் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் பட்சத்தில் இன்னும் அவர்களுக்கு வாய்ப்பு இருக்கும் என்பதால் இரு அணிகளும் முழு முனைப்புடன் களமிறங்கின.

- Advertisement -

சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. மீண்டும் ஒருமுறை ரிஷ்வான் மற்றும் பாபர் அசாம் ஜோடி ஏமாற்றியது.

ரிஸ்வான் நான்கு ரன்களுக்கும், பாபர் அசாம் ஆறு ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக சதாப்கான் 22 பந்துகளில் 55 ரன்கள் அடித்திருந்தார். இப்திகர் அகமது 51 ரன்கள், நவாஸ் மற்றும் முகமது ஹாரிஸ் இருவரும் தலா 28 ரன்கள் அடித்திருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 185 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக நாட்கியா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

இலக்கை துரத்திய தென்னாபிரிக்கா அணிக்கு டி காக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். கேப்டன் பவுமா இப்போட்டியில் நன்றாக ஆடி வந்தார். அவர் 19 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மார்க்ரம் 20 ரன்கள், ஸ்டாப்ஸ் 18 ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.

- Advertisement -

66 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. ஒன்பது ஓவர்கள் முடிவில் 69 ரன்கள் அடித்திருந்தபோது போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. பின்னர் 14 ஓவராக மாற்றப்பட்டு இலக்கு 142 ரன்கள் ஆக மாற்றப்பட்டது.

கடைசி ஐந்து ஓவர்களில் 73 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது.

பதினோராவது ஓவரில் சதாப் கான் அடுத்தடுத்து இரண்டு விக்கெட் எடுத்தது ஆட்டத்தின் போக்கை பாகிஸ்தான் அணிப்பக்கம் திருப்பினர். பின்னர் வந்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டம் இழக்க, 14 ஓவர்கள் முடிவில் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் மட்டுமே படைத்திருந்தது.

அதன் மூலம் டக்-வோர்த் லூயிஸ் முறைப்படி, பாகிஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் நான்கு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முன்னேறி இருக்கிறது.

மேலும் தென்னாப்பிரிக்கா அணி தோல்வியை தழுவியதால் இன்னும் பாகிஸ்தான் அணிக்கு அரை இறுதி போட்டிக்கு முன்னேற ஒரு வாய்ப்பு இருக்கிறது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு மீதம் ஒரு போட்டிகள் இருக்கின்றன. இரு அணிகளும் வெற்றி பெறும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி நேரடியாக வெளியேறும். ஏதேனும் ஒரு அணி தோல்வியை தழுவினால், ரன்ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அணிக்கு இன்னும் வாய்ப்பு இருக்கின்றன. கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் இரு அணிகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது