பாகிஸ்தான் சூப்பர் லீக் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்துள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி – ரசிகர்கள் கிண்டல்

0
9291
Shahid Afridi PSL

இந்த ஆண்டுக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி அன்று தொடங்கியது. தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று இஸ்லாமாபாத் மற்றும் கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கிளாடியேட்டர்ஸ் அணியின் கேப்டன் சர்பராஸ் அஹமது முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் அந்த அணியில் அதிகபட்சமாக களின் முன்ரோ 39 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் உட்பட 72* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -

பின்னர் 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விளையாடத் தொடங்கிய கிளாடியேட்டர்ஸ் அணி 20வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலமாக 43 ரன்கள் வித்தியாசத்தில் இஸ்லாமாபாத் அணி வெற்றி பெற்றது.

4 ஓவரில் 67 ரன்கள் விட்டுக்கொடுத்த அப்ரிடி

பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் வீரரான ஷாகித் அப்ரிடி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்றும் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார். கிளாடியேட்டர்ஸ் அணியில் விளையாடிக் கொண்டிருக்கும் அவர் நேற்று தன்னுடைய பந்துவீச்சில் மிகப்பெரிய அளவில் சொதப்பினார்.

4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை மட்டுமே அவர் கைப்பற்றினார். ஆனால் மறுபக்கம் 8 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி எதிரணி வீரர்களுக்கு விட்டுக்கொடுத்து மொத்தமாக 67 ரன்களை வாரி வழங்கினார். பின்னர் பேட்டிங்கிலும் 8 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே குவித்தார்.

- Advertisement -

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் வரலாற்றிலேயே ஒரு ஓவரில் அதிக ரன்களை வாரி வழங்கிய பந்துவீச்சாளர் என்கிற வினோதமான சாதனையை ஷாகித் அப்ரிடி நேற்று படைத்துள்ளார்.

அவருடைய சுமாரான பந்து வீச்சிற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலவகையில் கமெண்ட் செய்தனர். ஒரு சிலர் அவரை கிண்டல் அடிக்கும் விதமாகவும், ஒரு சிலர் அவரை ஆறுதல் படுத்தும் விதமாகவும் கமெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.