இந்தியாவுடன் ஆட சம்மதித்த பாகிஸ்தான்.. தப்பித்த பங்களாதேஷ் – இடையில் நடந்தது என்ன?

0
8
Pakistan

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் அந்த நாட்டு அணிக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. சில நாட்களாக இதைச் சுற்றி நடந்து வந்த பேச்சுவார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த வாரத்தில் பாகிஸ்தான் அரசு நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தங்கள் அணி விளையாடும் என்று அறிவித்தது. பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்துக்கு அநியாயம் செய்யப்பட்டு இருப்பதாக கூறி பாகிஸ்தான் அரசு இந்த முடிவை எடுத்தது.

- Advertisement -

இறங்கி வந்த பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம்

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஐசிசி இது சம்பந்தமாக அனைத்து முழு கிரிக்கெட் நாடுகளையும் அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. இந்த பேச்சு வார்த்தைக்கு பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியமும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையில் பங்கேற்காததற்கு அவர்களுக்கு எந்தவித தடையும் விதிக்கப்படாது என ஐசிசி உறுதி அளித்தது. மேலும் 2031 ஆம் ஆண்டுக்குள் பங்களாதேஷில் ஒரு ஐசிசி தொடர் நடத்தப்படும் என்றும் உத்தரவாதம் கொடுத்தது. இதைத்தொடர்ந்து பங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய தலைவர் இஸ்லாம் பாகிஸ்தான் அணி இந்தியா அணிக்கு எதிராக விளையாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

- Advertisement -

சம்மதித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

அதே சமயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முதலில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே தனிப்பட்ட தொடர்களை நடத்தவும், அடுத்து பாகிஸ்தான், இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளை வைத்து முத்தரப்பு தொடர் நடத்தவும், மேலும் தங்களுக்கு ஐசிசி நிதி பகிர்வை அதிகரித்து தர வேண்டும் என பல கோரிக்கைகளை வைத்தது. ஆனால் இதை ஒட்டுமொத்தமாக ஐசிசி மற்றும் பிசிசிஐ நிராகரித்துவிட்டது.

இதையும் படிங்க : உங்க ஆதரவுக்கு நன்றி.. தயவு செஞ்சு இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுங்க.. பாகிஸ்தானை கேட்டுக்கொண்ட வங்கதேச கிரிக்கெட் வாரியம்

இதைத்தொடர்ந்து பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்ட காரணத்தினால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பாகிஸ்தான் அரசாங்கத்துடன் பேசி தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இதைச் சுற்றி ஏற்பட இருந்த வருவாய் இழப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியங்கள் ஐசிசி தடைக்கு தப்பித்து உள்ளன!

- Advertisement -