ரெண்டு சொந்த சாதனைகளைப் பண்ணி பட்டையக் கிளப்பிய பட்லர்; ராஜஸ்தான் அபாரம்!

0
158
Butler

இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்திவரும் டி20 லீக் ஐபிஎல் தொடரின் 16வது சீசனில் நான்காவது போட்டி, இன்று ஐதராபாத் சன்ரைசர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி, ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் தற்பொழுது நடைபெற்று வருகிறது!

இந்தப் போட்டிக்கான டாஸில் வென்ற ஹைதராபாத் அணியின் தற்காலிக கேப்டன் புவனேஸ்வர் குமார் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். ஹைதராபாத் அணியில் இடம் பெற்றுள்ள தென்னாபிரிக்க வீரர்களான, கேப்டன் இடம் மார்க்ரம், ஜான்சென், கிளாசன் ஆகியோர் நெதர்லாந்துக்கு எதிரான சர்வதேச போட்டியில் விளையாடி வருவதால் அணியில் இடம் பெறவில்லை.

- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்கம் தர ஜோஸ் பட்லர் மற்றும் இளம் வீரர் ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினார்கள். ஆரம்பத்தில் எடுத்ததும் ஜெய்ஸ்வால் அதிரடியில் இறங்கி ஹைதராபாத் பந்துவீச்சாளர்களை நொறுக்க ஆரம்பித்தார்.

பின்பு கொஞ்ச நேரம் பொறுத்து பட்லர் அதற்குப் பிறகு சரவெடியாக வெடிக்க ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் எகிற ஆரம்பித்தது. 20 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் அரை சதத்தை எட்டி அசத்தினாள் பட்லர். இதற்கு அடுத்த பந்தில் ஒரு பவுண்டரி அடித்து அதற்கு அடுத்த பந்தில் ஆட்டம் இழந்தார். மொத்தம் 22 பந்துகளை சந்தித்த அவர் 7 பவுண்டரி மூன்று சிக்ஸர்கள் உடன் 54 ரன்கள் எடுத்தார். முதல் விக்கட்டுக்கு 5.5 ஓவர்களில் 85 ரன்கள் இந்த ஜோடி குவித்தது.

இதற்குப் பின்பு களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் ஜெய்ஸ்வால் உடன் கூட்டணி அமைத்து மிக அழகாக இன்னிங்ஸை கட்டமைத்து கொண்டு சென்றார். மிகச் சிறப்பாக விளையாடிய இருவருமே அரை சதம் அடித்தார்கள். ஜெய்ஸ்வால் 37 பந்தில் 54 ரன்களிலும், கேப்டன் சஞ்சு சாம்சன் 32 பந்தில் 55 ரன்களிலும் ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

கடைசியாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், ஹெட்மயர் வந்து 16 பந்துகளில் 22 ரன்கள் எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த தொடரில் முதல் அணியாக 200 ரன்களை எட்டி, ஐந்து விக்கட்டுகள் இழப்பிற்கு 23 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் அணிதரப்பில் நடராஜன் மூன்று ஓவர்கள் பந்து வீசி 23 ரன்கள் தந்து இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினார்.

ஐபிஎல் தொடரில் பவர் பிளே முடிவதற்குள் அரை சதத்தை மூன்று முறை எட்டி இரண்டாவது இடத்தை பிடித்தார் பட்லர். முதல் இடத்தில் டேவிட் வார்னர் பவர் பிளே அரை சதத்தில் ஆறு முறை அடித்து இருக்கிறார். இந்தப் போட்டியில் பவர் பிளேவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 85 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் தொடரில் இந்த அணிக்கு அதிகபட்ச பவர் பிளே ஸ்கோர் இதுதான். முதல் இடத்தில் கொல்கத்தா அணி 105 ரன்கள் எடுத்து இருக்கிறது.

இந்த ஆட்டத்தில் பவர் பிளேவில் மட்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை நொறுக்கி தள்ளியது. இதில் ஜெய்ஸ்வால் ஆறு பவுண்டரிகள், பட்லர் 7 பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்களை நொறுக்கினார். இறுதி நேரத்தில் கொஞ்சம் சிறப்பாக பந்து வீசிய ஹைதராபாத் அணி ஒரு 15 முதல் 20 ரன்களை கட்டுப்படுத்தி இருக்கிறது என்று கூறலாம்!