“3வது டெஸ்ட்.. லோக்கல்ல அடிச்ச மாதிரி.. எங்கள இந்த பையன் அடிச்சிட்டான்.. தடுக்கிற ஐடியாவே இல்ல” – ஓவைஸ் ஷா பேட்டி

0
581
Sarfaraz

நடந்து முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஜெய்ஸ்வால், கில் இவர்கள் இருவர் மட்டும் இல்லாமல், மேலும் 3 இளம் பேட்ஸ்மேன்கள் இருந்தார்கள். மூவருமே இந்தத் தொடரில் அறிமுகமானவர்கள்தான்.

ஆனால் இங்கிலாந்து பவுலிங் யூனிட்டுக்கு எதிராக இளம் வீரர்களை கொண்ட இந்திய பேட்டிங் யூனிட் செயல்பட்ட விதம் மிகச் சிறப்பாக இருந்தது.

- Advertisement -

அதிரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவதை வழக்கமாக வைத்திருக்கும் இங்கிலாந்து அணியை இந்த இளம் வீரர்கள் அசைத்துப் பார்த்து விட்டார்கள்.

ஜெயஸ்வால் யாரும் அருகில் வராத அளவுக்கு அதிரடியான விளையாட்டை இந்த தொடர் முழுக்க வெளிப்படுத்தி வருகிறார். 6 இன்னிங்ஸ் பேட்டிங் செய்து அதில் ஒன்றில் ஆட்டம் இழக்காமல் மொத்தம் 545 ரன்கள் குவித்திருக்கிறார்.

அதே சமயத்தில் கடந்த போட்டியில் அறிமுகமான மும்பை மாநில அணிக்காக விளையாடும் சர்ப்ராஸ் கான் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்திருக்கிறார். அடித்தது அரை சதம் என்றாலும் கூட, அவர் விளையாடிய முறை மிகச் சிறப்பாக இருந்தது.

- Advertisement -

சர்பராஸ் கான் உள்நாட்டு கிரிக்கெட்டில் 45 முதல் தர போட்டிகளில் விளையாடி, ஆச்சரியம் அளிக்கும் 70 ரன்கள் என்கின்ற சராசரியில், 3912 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் 11 அரை சதங்கள் அடித்து இருக்கும் அவர், 14 சதங்கள் அடித்து இருக்கிறார். இதில் இரட்டை சதம், முச்சதம் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது பேட்டிங் அணுகுமுறை குறித்து பேசி உள்ள இங்கிலாந்து முன்னாள் வீரர் ஓவைஸ் ஷா “சர்பராஸ் கான் உள்ளே வரும்பொழுது அடித்து விளையாட வேண்டும் என்கின்ற எண்ணத்தில்தான் வந்திருக்கிறார். அவர் தடுத்து விளையாட வேண்டும் என்று நினைக்கவே இல்லை. அவரது வித்தியாசமான மனநிலை மற்றும் உடல் மொழி எனக்கு சிறப்பாக இருக்கிறது.

அவர் பந்தை விளையாடும் பொழுது, எங்கே பவுண்டரி இல்லை சிக்ஸர் அடிப்பார் என்று நாம் யோசிக்கிறோம். அது ஒரு நல்ல பந்தாக இருந்தால் கூட அவர் சிங்கிள் எடுத்து விடுகிறார். அவர் முதல் தர கிரிக்கெட்டில் எப்படி விளையாடினாரோ அதேபோல் விளையாடுகிறார். மேலும் அங்கிருந்து அவர் சர்வதேச கிரிக்கெட் விளையாட தயாராகிவிட்டார்” என்று கூறியிருக்கிறார்.