இந்த இரண்டு பேரை மட்டும் நம்பி உலகக்கோப்பைக்கு வந்தால், எப்படி ஜெயிக்க முடியும்? – முன்னாள் வீரர் சாடல்!

0
9081

இரண்டு வீரர்களை மட்டும் நம்பிக்கொண்டு இந்திய அணி எப்படி உலகக் கோப்பை வெற்றி பெறலாம் என நினைத்தது? என்று கடுமையாக சாடியுள்ளார் மான்டி பனேசர்.

நடந்து முடிந்த உலகக் கோப்பை அரை இறுதி சுற்றில் இந்திய அணி இங்கிலாந்திடம் படுதோல்வியை சந்தித்து மோசமான நிலையில் வெளியேறியுள்ளது.

- Advertisement -

குறிப்பாக பேட்டிங்கில் பலம் பொருந்திய அணியாக காணப்பட்ட இந்தியா தொடர் முழுவதும் சூரியகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி இருவரின் பேட்டிங்கை மட்டுமே நம்பி களமிறங்கி விட்டதோ என்கிற கேள்வி, அரை இறுதி போட்டியில் இந்திய அணி விளையாடிய விதத்தை வைத்து தோன்றுகிறது.

ஏனெனில் இந்தியா விளையாடிய ஆறு போட்டிகளில் விராட் கோலி 296 ரன்களும், சூரியகுமார் யாதவ் 24 ரன்களும் அடித்திருக்கின்றனர். மற்ற வீரர்கள் 100 ரன்களுக்கும் குறைவாகவே அடித்திருக்கின்றனர். மேலும் தொடர் முழுவதும் கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா இருவரிடம் இருந்து சரியான துவக்கம் கிடைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

இந்நிலையில், இந்திய அணி இரண்டு வீரர்களை மட்டும் நம்பிக் கொண்டு எப்படி உலக கோப்பையை வென்று விடலாம் என கனவு கண்டது? என்று கடுமையாக சாடியுள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மான்டி பனேசர்.

- Advertisement -

“இந்திய அணியில் பல திறமையான வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் உலக கோப்பைக்கு முன்பு சரியான ஃபார்மில் இல்லாத வீரர்களுடன் களமிறங்கி இருக்கிறது. மேலும் நல்ல பார்மில் இருக்கும் சூரியகுமார் மற்றும் விராட் கோலி இருவரை மட்டும் முழுமையாக நம்பியுள்ளது.

இதில் ஆச்சரியப்படும் விதமாக யாரும் எதிர்பாராத வகையில் செயல்பட்டது அர்ஷ்தீப் சிங். அவருக்கு இந்த உலகக்கோப்பை மறக்க முடியாத ஒன்றாக நிச்சயம் இருக்கும். இந்திய அணிக்கு கிடைத்திருக்கும் பொக்கிஷம் அவர்.

கோப்பையை வெல்வதற்கு இவர்கள் மட்டும் செயல்பட்டால் போதாது. ஒட்டுமொத்த அணியாக செயல்பட வேண்டும். அதை ஏன் புரிந்து கொள்ளாமல் இருவரை மட்டும் நம்பி இந்திய அணி களம் இறங்கியது?. எனக்கு இதுதான் புரியவில்லை. அணி நிர்வாகம் இதனை பரிசீலனை செய்து தவறுகளை சரி செய்து கொள்ள வேண்டும். நடந்ததை நினைத்து அதிலேயே தேங்கி விடக்கூடாது.” என்று ஆறுதலாகவும் பேசி அறிவுறுத்தினார்.