ஃபார்ம்ல இல்லையா? 30 டெஸ்ட் இன்னிங்ஸ்களாக அசத்தி ஜெயவர்த்தனேவின் உலக சாதனையை தகர்த்த ரோகித் சர்மா!

0
252
Rohitsharma

இந்திய கிரிக்கெட்டில் சீனியர் வீரர்கள் நகர்ந்து இளம் வீரர்கள் உள்ளே வந்து, புதிய அணிகள் உருவாகும் காலக்கட்டமாக இந்த நேரம் அமைந்திருக்கிறது!

மிகக்குறிப்பாக தற்போது மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா, இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை முடிந்ததும், கேப்டனாக இருப்பாரா என்பதை தாண்டி அணியில் தொடர்வாரா என்பதை சந்தேகம் என்றுதான் பலர் பேசி வருகிறார்கள்.

- Advertisement -

ரோஹித் சர்மாவின் உடல் தகுதி இன்று வரையில் கேள்விக்குறியான ஒன்றாகவே இருக்கிறது. இதுகுறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் வெளியில் பெரிய அளவில் தெரியாத ஒரு உலகச் சாதனையை அவர் படைத்திருக்கிறார். நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு 35 பந்தில் அதிரடியாக ரோகித் சர்மா அரை சதம் எடுத்துக் கொடுத்தார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 30 இன்னிங்ஸ்கள் இரட்டை இலக்கத்தில் ரன் அடித்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை ரோகித் சர்மா படித்திருக்கிறார். இதற்கு முன்பு இந்த உலகச் சாதனை 29 இன்னிங்ஸ்கள் என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மகில ஜெயவர்த்தனைவிடம் இருந்தது.

- Advertisement -

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிக இன்னிங்ஸ் இரட்டை இலக்க ரன் அடித்தவர்கள் பட்டியல்.

ரோகித் சர்மா 30 இன்னிங்ஸ்கள்
ஜெயவர்த்தனே 29 இன்னிங்ஸ்கள்
லென் ஹட்டன் 25 இன்னிங்ஸ்கள்
ரோகன் கன்ஹய் 25 இன்னிங்ஸ்கள்
ஏபி டிவில்லியர்ஸ் 24 இன்னிங்ஸ்கள்

இது மட்டும் இல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இந்திய அணிக்காக ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் நிறைய சாதனைகளை தன் வசம் வைத்திருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் இந்திய அணிக்காக பேட்ஸ்மேனாக எல்லாவிதத்திலும் முன்னணியில் இருப்பவர் அவர்தான்.

இதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் இந்திய அணிக்காக அதிக ரன்கள், அதிக சதங்கள், அதிக அரை சதங்கள், அதிக பவுண்டரிகள் அதிக சிக்ஸர்கள், அதிக 100 ரன் பார்ட்னர்ஷிப்புகள் என்று ரோகித் சர்மாதான் எல்லாவற்றிலும் மற்ற இந்திய பேட்ஸ்மேன்களை விட முன்னால் இருக்கிறார்.

இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிந்ததும், இந்திய வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டன் பொறுப்பை ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைத்து விட்டு, ரோகித் சர்மா அடுத்த சில வருடங்கள் இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக மட்டும் தொடர்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.