ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு புதிய இஞ்சுரி, இனி எங்களது மருத்துவ குழுவின் பார்வை அவர் மீது எப்போதும் இருக்கும் – மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே

0
536

கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் என இரண்டிலும் ஜோஃப்ரா ஆர்ச்சர் பங்கேற்று விளையாடினர். அதன் பின்னர் அவரது வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது. காயத்தின் தன்மை தீவிரமாக இருந்ததால் மருத்துவ குழுவின் ஆலோசனைப்படி மே மாதம் முதல் அறுவை சிகிச்சையை எடுத்துக் கொண்டார். பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாவது அறுவை சிகிச்சையும் எடுத்துக் கொண்டார்.

மீண்டும் அவர் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கவுண்டி கிரிக்கெட் தொடரில் களம் இறங்குவார் என்று முன்பே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது மற்றொரு காரணமாக அவர் மீண்டும் ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு சென்றிருக்கிறார்.அவரது கீழ் முதுகில் ஏற்பட்ட அழுத்த முறிவு காரணமாக கவுன்டி கிரிக்கெட் தொடரில் இருந்து இருந்து விலகியுள்ளார்.

இந்த காயம் இன்னும் எவ்வளவு நாட்களில் குணமாகும் என்கிற அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை. இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் ஐசிசி உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெறவிருக்கும் நிலையில், கூடிய விரைவில் அவர் மீண்டு வரவேண்டும் என்பதே அனைத்து இங்கிலாந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

எங்களுடைய மருத்துவ குழுவும் அவர் மீது இனி கண் வைக்கும்

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர்பான மெகா ஏலத்தில் ஆர்ச்சரை 8 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றி இருந்தது. அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தான் பங்கேற்பார் என்று தெரிந்திருந்தும் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை அதிக தொகைக்கு கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக அந்த அணி வெளியேறிய நிலையில், அடுத்த ஆண்டு சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே மும்பை அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நிச்சயமாக அவர் விளையாடினால் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமையும்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மஹேல ஜெயவர்தனே, “அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெற இன்னும் நிறைய மாதங்கள் இருக்கின்றது. தற்பொழுது அதைப் பற்றிய பேச்சு எடுக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். ஆர்ச்சர் மீது எங்களுடைய மருத்துவக் குழுவும் ஒரு கண் வைத்து இருக்கும்.

இங்கிலாந்து கிரிக்கெட் மருத்துவக் குழுவுடன் இணைந்து எங்களுடைய மருத்துவக் குழுவும் இனி செயல்படும் என்றும், ஆர்ச்சர் கூடிய விரைவில் குணமடைய வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவருக்கு தற்போது ஏற்பட்டது புதிய இஞ்சுரி, அதிலிருந்து அவரை சீக்கிரத்தில் இயல்பு நிலைக்கு கொண்டுவர முழு முயற்சியும் இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.