நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் களமிறங்கும் தொடக்க வீரர்கள் அறிவிப்பு – ஷுப்மன் கில்லுக்கு இடம் இல்லை

0
341
Ajinkiya Rahane and Shubman Gill

ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 3-0 என்கிற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து டி20 தொடரை கைப்பற்றியது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நிறைவடைந்த நிலையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 25-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி கான்பூரிலும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பையிலும் நடைபெற உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடாத நிலையில், அஜிங்கிய ரஹானே தலைமையில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஓபனிங் வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வாலை விளையாட வைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

சுப்மன் கில்லை மிடில் ஆர்டரில் விளையாட வைக்க முடிவு

இந்திய அணிக்காக சுப்மன் கில் ஓபனிங் வீரராக களமிறங்கி 15 இன்னிங்ஸ்களில் மூன்று அரைச் சதங்களுடன் 411 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவருடைய பேட்டிங் ஆவரேஜ் 31.85 ஆக உள்ளது. அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 55.77 ஆக உள்ளது. இதுவரை அவர் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் ஓபனிங் வீரராகவே விளையாடியுள்ள நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவரை மிடில் ஆர்டர் இடத்தில் விளையாட வைக்க இந்திய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இவர்கள் இருவரும் இணைந்து நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஓபனிங் இடத்தில் விளையாடுவார்கள் என்று தற்போது தகவல் உறுதியாகியுள்ளது. இவர்கள் இருவரும் ஓப்பனிங் வீரர்களாக நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறார்கள்.

ஆனால் மறுபக்கம் சுப்மன் கில் இதுவரை மிடில் ஆர்டர் இடத்தில் இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடியதில்லை. எனவே இந்த கடும் சவாலை அவர் எவ்வாறு எதிர் கொள்ளப் போகிறார் என்பதை காண அனைத்து இந்திய ரசிகர்களும் ஆவலாக உள்ளனர். கில் நிச்சயமாக தனது நிதானமான பேட்டிங்கை தொழிலாளர் வரிசையிலும் பிரதிபலிப்பார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -