“இவங்க மட்டும் இருந்திருந்தா நடந்திருக்கிறதே வேற!” – தோல்வி பற்றி பாபர் ஆஸம்!

0
675
Babar

நீண்ட வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் தொடர் விளையாட பாகிஸ்தான் வந்த இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முற்றிலுமாக வென்று பாகிஸ்தான் அணிக்கு வெள்ளை அடித்தது!

இந்த வெற்றிக்கு இங்கிலாந்து அணி தகுதியானது என்றாலுமே, பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வெள்ளை அடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது!

- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டி அணுகுமுறை இங்கிலாந்து அணிக்கு இப்படி ஒரு மகத்துவமான வெற்றியைக் கொண்டு வந்திருக்கிறது என்று கூறலாம்!

அதே சமயத்தில் இது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசமுக்கு சோதனை காலமாகவே இருந்து வருகிறது. அவரது கேப்டன்ஷிப் குறித்து அந்த நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரர்களே கடுமையான விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.

தற்பொழுது தோல்வி குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ” கேப்டன் பதவி எனக்கு கௌரவமான விஷயம். நாட்டுக்காகவும் எனக்காகவும் என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வேன். ஆட்டத்தில் அழுத்தம் இருக்கும் பொழுது அதை நான் அனுபவிக்கத்தான் செய்கிறேன். கேப்டன் பொறுப்பு எனது பேட்டிங்கை பாதிக்காது. இந்த தொடரைப் பொறுத்தவரை நாங்கள் எங்களைச் சரியாகப் பயன்படுத்தவில்லை. எனக்கு முதலில் பாகிஸ்தான்தான் பிறகு தான் எல்லாமே. என்னுடைய நோக்கம்தான் எனக்கு முதன்மையானது” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” ஒரு கேப்டனாக நான் எனது வீரர்களை பாதுகாப்பேன். அவர்களுக்காக நான் முன்னே நிற்பேன். பயிற்சியாளர்கள் எங்களுக்கு திட்டங்களை தருகிறார்கள். வீரர்கள் நாங்கள் அதை களத்தில் சரியாக செயல்படுத்த வேண்டும். எங்களின் முக்கியமான வேகப்பந்துவீச்சாளர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது எங்களுக்கு துரதிஷ்டவசமானது. புதிய வீரர்களைக் கொண்டு நாங்கள் விரும்பிய வழியில் எங்களால் விளையாட முடியவில்லை இது முடிவுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது” என்று கூறி இருக்கிறார்!