“அந்த இந்திய வீரரின் பவுலிங்கை மட்டும் அவுட்டாக கூடாதுன்னு பயந்துட்டே ஆடுனேன்” – சதமடித்த டாம் லேதம் கொடுத்த ஆச்சர்யமான பேட்டி!

0
1111

முதல் ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த டாம் லேத்தம், இந்த இந்திய பவுலரின் பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு கடினமாக இருந்தது எனக் கூறியது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று பவுலிங் செய்தது நியூசி., அணி.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் அடித்தது. கேப்டன் ஷிகர் தவான் 72 ரன்கள் மற்றும் சுப்மன் கில் 50 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர்.

ஷ்ரேயாஸ் அபாரமாக ஆடி 80 ரன்கள் அடித்து கொடுக்க, வாஷிங்டன் சுந்தர் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் அடித்து, 37 (16) ரன்கள் அடித்தார்.

307 ரன்கள் இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 88 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. நான்காவது விக்கெட்டுக்கு வில்லியம்சன் மற்றும் டாம் லேத்தம் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து 221 ரன்கள் சேர்த்தனர். இதுதான் நியூசிலாந்து வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது.

லேத்தம் 104 பந்துகளில் 145 ரன்களும் வில்லியம்சன் 94 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். 47.1 ஓவர்களில் இலக்கை எட்டிய நியூசிலாந்து 309/3 எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட டாம் லேத்தம் கூறியதாவது:

“நாம் என்ன செய்தாலும் நமக்கு சாதகமாக அமைந்த அப்படியொரு நாள் இந்த நாள். நான் இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என நினைக்கவில்லை. வீசப்பட்ட பங்கிற்கு ஏற்றவாறு ஷார்ட்களை விளையாடினேன்.

மேலும் எந்த இடம் காலியாக இருக்கிறது என்பதை கணித்து, அந்த இடத்தில் பந்தை அடிக்க முயற்சித்தேன். எனக்கு சாதகமாக அமைந்துவிட்டது. அனுபவமிக்க கேன் வில்லியம்சனுடன் பார்ட்னர்ஷிப் அமைத்ததும் நிறைவாக இருந்தது.

மற்ற இந்திய பவுலர்களை விட வாஷிங்டன் சுந்தர் பந்து வீசியது விளையாடுவதற்கு கடினமாக இருந்தது. அதே நேரம் மைதானம் சிறியதாக இருந்தால் அதை பயன்படுத்திக் கொண்டோம்.” என்றார்.