சச்சின் டெண்டுல்கரை பார்த்து இந்த விஷயத்தை கற்றுக் கொள்ளுங்கள் – விராட் கோலியை குறை கூறுபவர்களுக்கு சோயப் அக்தர் கொடுத்த சவுக்கடி

0
29

ஒரு சமயத்தில் விராட் கோலியை தொடர்ச்சியாக சர்வதேச சதங்களை குவித்து வந்த வண்ணம் இருந்தார். ஆனால் அவர் கடைசியாக 2019ஆம் ஆண்டு தனது 70வது சதம் அடித்தார். அதற்குப் பின்னர் கடந்த மூன்று வருடங்களில் எந்தவித சதமும் அவர் அடிக்கவில்லை. கடந்த மூன்று வருடங்களில் அவருடைய ஆட்டம் சற்று சுமாராக தான் இருந்துள்ளது.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கூட 16 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 341 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். விராட் கோலி குறித்து ஒரு சில முன்னணி கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து விவாதித்து விமர்சனம் செய்து வரும் நிலையில், அவை அனைத்திற்கும் சோயப் அக்தர் தற்பொழுது பதிலளித்திருக்கிறார்.

அனைத்து காலகட்டத்திற்கும் ஏற்ற சிறந்த வீரர் அவர்

எப்பொழுதும் அனைத்து காலகட்டத்திற்கு ஏற்ற சிறந்த வீரர் யார் என்று கேட்டால் விராட் கோலி என்றுதான் நான் கூறுவேன். தற்பொழுது அவர் மோசமான பார்மில் இருக்கிறார் அது உண்மைதான். இருப்பினும் இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது. தற்போது அவர் சந்தித்துக்கொண்டிருக்கும் கடின பாதை அவரை இன்னும் பல சதங்கள் அடிக்க வைக்கும் ஊக்க சக்தியாக மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

நீங்கள் தீபாவளியைப் பற்றி ட்வீட் செய்தால் அதை கூட விமர்சனம் செய்வார்கள். உங்களுடைய மனைவி மற்றும் குழந்தையை கூட விமர்சனம் செய்வார்கள். நீங்கள் உலக கோப்பை வெல்லவில்லை என்றாலும் உங்களை கடுமையாக விமர்சனம் செய்வார்கள். அவை அனைத்தையும் கண்டு கொள்ளாமல் நீங்கள் யார் என்று உங்களால் என்ன முடியும் என்பதை அவர்களுக்கு நிரூபிக்க வேண்டும். இவ்வாறு விராட் கோலிக்கு சோயப் அக்தர் தைரியம் கொடுத்து இருக்கிறார்.

மேலும் பேசிய அவர் விராட் கோலி 45 வயது வரை விளையாட வேண்டும்.அவர் தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் அனைத்துக் கஷ்டங்களும் அவருடைய வேகத்தை அதிகரிக்கவும் உதவி செய்யும். இது அவரை 110 சதங்கள் அடிக்க உதவி புரியும் என்றும் கூறியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்

கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்த வரையில் சச்சின் டெண்டுல்கர் தற்போது தொட்டிருக்கும் உச்சம் அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. அப்பேர்பட்ட பெருமைக்குச் சொந்தக்காரரான அவர் எப்பொழுதும் கண்ணியமாக நடந்து கொள்வார்.ஒருவர் பற்றி பேசுவதற்கு முன்னர் அவர்களை காயப்படுத்தாத விதத்தில் அவர் பேசுவார். இந்த விஷயத்தில் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.

விராட் கோலியை குறித்து விமர்சனம் செய்வதற்கு முன்னர் முதலில் சச்சின் டெண்டுல்கரை பார்த்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவரை பற்றி பேசுவதற்கு முன்னர் எப்படி பேச வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் சோயப் அக்தர் அதிரடியாக கூறியுள்ளார்.