ரோஹித் சர்மாவை தொடர்ந்து மற்றொரு வீரரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகல் – பிசிசிஐ அறிவிப்பு

0
951
rohit sharma navdeepsaini

இந்தியா பங்களாதேஷ் இடையே நடந்து கொண்டிருக்கும் டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட்டில் இந்திய‌அணி வெற்றி வாகை சூடப்பட்டதை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் வருகின்ற வியாழக்கிழமை ‘மிர்பூர்’ல் நடக்கவுள்ளது. அதற்கான அணியில் யார் விளையாடுகிறார்கள் என்ற அறிவிப்பை ‘பிசிசிஐ’ இன்று வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கே எல் ராகுல் தான் தொடர்ந்து கேப்டனாக இருந்து அடுத்து வரும் போட்டியில் இந்திய அணியை திறம்பட நிர்வகிக்கப் போகிறார்.

கிரிக்கெட் ரசிகர்கள், ரோஹித் சர்மா ஏன் கலந்துக்கொள்ளவில்லை? என்ற‌ கேள்விக்கு பிசிசிஐ மருத்துவக்கழு “ரோஹித் சர்மா விற்கு பெரும் விரலில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவரால் இன்னேரம் சரிவர பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்க செய்ய இயலாது. அந்த காயம் குணமாவதற்கு இன்னும் சற்று காலம் கண்டிப்பாக தேவைப்படுகிறது. அதனால் அவரால் பங்களாதேஷ் க்கு எதிரான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டிகளில் கலந்துக் கொள்ள இயலாது,
இதற்கு பிறகு நடக்க இருக்கும் இலங்கையுடன் தொடரும் விளையாட்டுகளில் அவர் கலந்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

கேப்டன் ரோஹித் சர்மாவை தொடர்ந்து இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனியும் காயம் காரணமாக அணியிலிருந்து விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது . இதனை எடுத்து பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அடிவயிற்றின் தசை பிடிப்பு காரணமாக நவ்தீப் சைனியும் இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய அணியில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை. இரண்டாவது டெஸ்ட் கான ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்து இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படலாம் என்று தெரிகிறது . மேலும் எல்லா டாப் ஆர்டர் பேட்ஸ்மன்களும் நல்ல ஃபார்மில் இருப்பதால் எந்தவித மாற்றங்களும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது