40 வயதில் ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்! மிகவும் இளம் வீரர், அதிக வயதான வீரர் யார் யார்? – விபரம் உள்ளே!

0
2378

2023 ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ளும் மிகவும் வயதான மற்றும் இளமையான வீரர்கள் பற்றிய விவரங்களை நாம் இங்கு காண்போம்.

2023 ஐபிஎல் தொடருக்கான சிறிய அளவிலான ஏலம் வருகிற டிசம்பர் கடைசி வாரம் நடத்தப்பட இருக்கிறது. பத்து அணிகள் கலந்து கொள்ளும் இந்த ஏலத்தில் சுமார் 990 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி பத்து ஐபிஎல் அணிகளும் தங்களது அணிகளில் யார் யாரை தக்க வைப்பது? யார் யாரை வெளியேற்றுவது? என்கிற பட்டியலை வெளியிட்டது. மேலும் வெளியேற்றப்பட்ட வீரர்களின் மதிப்பு மீண்டும் அப்படியே பர்சில் வந்துள்ளது.

அதை வைத்து இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் வீரர்களை எடுத்துக்கொள்ளலாம். மேலும் இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பதற்கு முன்பு ஒவ்வொரு அணிக்கும் தலா 5 கோடி ரூபாய் கூடுதல் போனஸ் ஆக வழங்கப்பட்டிருக்கிறது.

அதிகபட்சமாக தனது பர்சில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சுமார் 47 கோடி ரூபாய் வைத்திருக்கிறது. மிகவும் குறைந்தபட்சமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெறும் ஏழு கோடி ரூபாய் மட்டுமே வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு நமக்கு கிடைத்திருக்கும் மிகவும் சுவாரசியமான தகவல் என்னவென்றால், 40 வயதில் இருக்கும் வீரர் ஏலத்தில் பங்கேற்பதற்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். அதேபோல் மிகவும் 18 வயது நிரம்பாத இளமையான வீரர் ஒருவர் ஏலத்தில் பங்கேற்பதற்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். இவர்கள் இருவரும் யார் யார் என்பதை பின்வருமாறு காண்போம்.

மிகவும் வயதான வீரர் – அமித் மிஸ்ரா – 40 வயது 29 நாட்கள் (இந்தியா)

மிகவும் இளமையான வீரர் – ஆயன் அப்சல் கான் – 17 வயது 38 நாட்கள் (யுஏஈ)