“ஆமா கோலி சுயநலவாதிதான்!” – வீண் விமர்சனங்களுக்கு வித்தியாசமான பதிலடி தந்த வெங்கடேஷ் பிரசாத்!

0
2387
Virat

நேற்று இந்திய அணிக்கு கொல்கத்தாவில் மிகச் சிறப்பான நாளாக அமைந்தது. இந்த உலகக் கோப்பை தொடரில் சவால் அளிக்கக்கூடிய அணியாக இருந்த தென் ஆப்பிரிக்க அணியை மிக எளிதாக வீழ்த்தி ஆச்சரியப்படுத்தி இருந்தது.

மேலும் நேற்றைய நாளில் விராட் கோலிக்கு 35 ஆவது பிறந்தநாள் என்பதாலும், இந்த நாளில் அவர் சச்சின் டெண்டுல்கரின் ஒருநாள் கிரிக்கெட் அதிகபட்ச சகசாதனையை சமன் செய்வாரா என்றும் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

- Advertisement -

ரசிகர்களின் இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பை நேற்று விராட் கோலி நிறைவேற்றி வைத்தார். 121 பந்துகளை சந்தித்து ஆடுகளத்திற்கு தகுந்தாற்போல் விளையாடி 101 ரன்கள் எடுத்து சச்சின் சாதனையை சமன் செய்தார்.

மேலும் இந்திய அணியும் பந்துவீச்சில் வந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை நேற்று கொடுத்தது. ஒட்டுமொத்தமாக நேற்று நிறைவான ஒரு போட்டியாக இந்திய கிரிக்கெட்டுக்கு அமைந்தது.

இந்த நிலையில் விராட் கோலி சதத்திற்காக சுயநலமாக விளையாடுகிறார் என்று வெளியில் இருந்து சில தேவையில்லாத சத்தங்கள் வந்து கொண்டு இருந்தது. அவருடைய இத்தனை நாள் அர்ப்பணிப்பான விளையாட்டுக்கு பழி சொல்லுவது போலான விமர்சனங்கள் வந்தன.

- Advertisement -

குறிப்பாக பாகிஸ்தான அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் வெளிப்படையாகவே ரோஹித் சர்மாவை பாராட்டி விராட் கோலி சுயநலமாக சதத்திற்கு விளையாடுகிறார் என்று பேசி இருந்தார். இது இப்பொழுது சமூக வலைதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த விமர்சனத்திற்கு பதிலடி தந்து பேசிய இந்திய முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் “விராட் கோலி சுயநலமானவர் மற்றும் தனிப்பட்ட சாதனைகளில் வெறி கொண்டவர் என்ற கருத்துக்களை கேட்க வேடிக்கையாக இருக்கிறது.

ஆமாம் விராட் கோலி ஒரு சுயநலவாதிதான். ஒரு பில்லியன் மக்களின் கனவை சுமந்து கொண்டு பின்பற்றும் சுயநலவாதி. இவ்வளவு சாதித்த பிறகும் சிறந்து விளங்க பாடுபடும் சுயநலவாதி. தனி வரையறைகளை இப்பவும் உருவாக்கப் போராடும் சுயநலவாதி. தன் அணியை எப்பொழுதும் வெற்றி பெற வைக்கும் அளவுக்கு போராடும் சுயநலவாதி. ஆமாம் விராட் கோலி சுயநலவாதி!” என்று வித்தியாசமாகப் பதிலடி தந்திருக்கிறார்!