ஓடிஐ சீரிஸ்.. வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு.. நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிரடி நட்சத்திர வீரர் அணியில் சேர்ப்பு!|

0
3193
Indvswi2023

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் முகாமிட்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் என மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது!

இதில் முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியை 141 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்யாசத்தில் வென்று, மழையால் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிய தொடரை 1-0 என இந்திய அணி கைப்பற்றியது.

- Advertisement -

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பிக்க இருக்கிறது. இந்த ஒருநாள் தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடர். ஏனென்றால் இந்திய அணியில் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில் நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் விளையாடுவதற்கான வீரர் யார் என்று கண்டறிவதற்கான ஒரு தொடர்.

அதே சமயத்தில் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி மிக மோசமாகச் செயல்பட்டு யாரும் எதிர்பாராத விதமாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறி வந்திருக்கிறது.

இந்த வகையில் எடுத்துக் கொண்டால் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தத் தொடரில் இந்திய அணியை ஒரு போட்டியில் வீழ்த்தினால் கூட அவர்கள் அடைந்த தோல்விக்கும், ரசிகர்களுக்கும் மிகவும் ஆறுதலான ஒன்றாகவும் நம்பிக்கையான ஒன்றாகவும் அமையும்.

- Advertisement -

தற்பொழுது இந்த மாதம் 27, 29, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி என இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் துவங்கி நடைபெற்று முடிய இருக்கிறது. இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த அணியில் அதிரடி ஆட்டக்காரர் இடது கை பேட்ஸ்மேன் சிம்ரன் ஹெட்மையர் மீண்டும் உள்ளே வந்திருக்கிறார். கடந்த டி20 உலக கோப்பை தகுதி சுற்றில் அணி நிர்வாகத்துடன் சில கசப்புகள் ஏற்பட்டு விமானத்தை தவறவிட்டதாக அவர் அணியில் இடம் பெறவில்லை. மீண்டும் புதிய அணியை உருவாக்க அவரை உள்ளே அழைத்து வந்திருக்கிறார்கள்.

இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி :

ஷாய் ஹோப் (கேப்டன்), ரோவ்மேன் பவல் (துணை கேப்டன்), அலிக் அதானாஸ், யானிக் கரியா, கீசி கார்டி, டொமினிக் டிரேக்ஸ், ஷிம்ரோன் ஹெட்மியர், அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், ஓஷன் தாமஸ், கெவின் சின்க்ளேர்.