ODI பேட்ஸ்மேன் ரேங்க்.. ரோகித் வரலாற்றில் முதல்முறையா கோலியை தாண்டினார்.. கில் புதிய சரித்திரத்துக்கு காத்திருப்பு!

0
4932
Gill

இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் பேட்ஸ்மேன்களிடம் இருந்து சதங்கள் கொட்டின. இதற்குப் பிறகு அப்படியே சதங்கள் படிப்படியாக இரண்டாவது வாரத்தில் குறைய ஆரம்பித்து இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஆஸ்திரேலியா அணிக்கு ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, அதற்குப் பிறகு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அதிரடி சதம், பாகிஸ்தானுக்கு அதிரடியாக 86 ரன்கள் என மிகச் சிறப்பாக இருக்கிறார்.

- Advertisement -

இன்னொரு பக்கத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 85 ரன்கள் சதத்தை தவறவிட்டு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஆட்டம் இழக்காமல் அரை சதம் அடித்து இருந்தார்.

அதே சமயத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில் இந்திய அணிக்காக முதல் இரண்டு போட்டிகளில் களம் இறங்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக மூன்றாவது போட்டியில் அதிரடியாக நான்கு பவுண்டரிகளுடன் ஆரம்பித்தவர் ஆட்டம் இழந்தார்.

இந்த நிலையில் ஐசிசி இன்று ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. தற்பொழுது மிகச் சிறப்பான பேட்டிங் ஃபார்மில் இருக்கும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 719 புள்ளிகள் உடன் ஆறாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி 711 புள்ளிகள் எடுத்து, டேவிட் மலான் உடன் எட்டாவது இடத்தை பகிர்ந்து இருக்கிறார். ரோஹித் சர்மா ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலிக்கு மேல் சென்றது இதுவே அவரது கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாகும்.

அதே சமயத்தில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சுப்மன் கில் பாபர் அசாமை விட 18 புள்ளிகள் மட்டும் குறைவாகப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தியிருக்கிறார். இரண்டு போட்டிகளை தவறவிடாமல் இருந்திருந்தால் இதில் பெரிய மாற்றங்கள் வந்திருக்கலாம்.

தற்பொழுது கில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி என மூன்று இந்திய பேட்ஸ்மேன்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை முதல் 10 இடங்கள் :

பாபர் அசாம் பாகிஸ்தான் 836 புள்ளிகள்
சுப்மன் கில் இந்தியா 816 புள்ளிகள்
குயிண்டன் டி காக் சவுத் ஆப்பிரிக்கா 742 புள்ளிகள்
ராஸி வாண்டர் டேசன் சவுத் ஆப்பிரிக்கா 732 புள்ளிகள்
ஹாரி டெக்டர் அயர்லாந்து 729 புள்ளிகள்
ரோஹித் சர்மா இந்தியா 719 புள்ளிகள்
டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா 712 புள்ளிகள்
டேவிட் மலான் இங்கிலாந்து 711 புள்ளிகள்
விராட் கோலி இந்தியா 711 புள்ளிகள்
இமாம் உல் ஹக் பாகிஸ்தான் 705 புள்ளிகள்