“என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஆட்டம் அது” – விராட் கோலி ட்வீட்!

0
718

“காலம் முழுவதும் என் மனதிற்கு நெருக்கமான ஆட்டம் அது” என்று தனது சமீபத்திய ட்வீட்டில் பதிவு செய்து இருக்கிறார் விராட் கோலி.

டி20 உலக கோப்பை தொடர் இந்திய அணிக்கு நடந்து முடிந்த விதம், இந்திய ரசிகர்களால் மறக்கக்கூடிய ஒன்றாக இருக்கலாம். ஆனால் அது துவங்கிய விதம் எவராலும் மறந்து விட முடியாது.

- Advertisement -

அக்டோபர் 23ஆம் தேதி இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியது. சூப்பர் 12 சுற்றில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 159 ரன்கள் அடித்திருந்தது.

இதை சேஸ் செய்த இந்திய அணிக்கு விக்கெட்டுகள் அவ்வளவாக விழவில்லை என்றாலும், பாகிஸ்தானின் பந்துவீச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க திணறினர்.

கடைசி இரண்டு ஓவர்களில் 31 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் ஹர்திக் மற்றும் விராட் கோலி இருவரும் இருந்தனர். 19 ஓவரை ஹரிஷ் ராவ்ப் வீசினார். முதல் நான்கு பந்துகளில் மூன்று ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

18.5 மற்றும் 18.6 ஆகிய கடைசி இரண்டு பந்துகளை அடுத்தடுத்து சிக்ஸர்கள் அடித்து மீண்டும் நம்பிக்கையை பெற்றுத்தந்தார் விராட் கோலி.

ஹரிஷ் ராவ்ப் அப்போட்டியில் அதற்கு முந்தைய ஓவர்களை அபாரமாக வீசி வந்தார். கடைசியாக வீசிய இரண்டு பந்துகளும் சிறப்பாக இருந்தது. அதைவிட சிறந்த ஃபார்மில் இருந்த விராட் கோலி, அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்தது இன்றளவும் மனதில் இருந்து நீங்காமல் இருக்கிறது.

இறுதியாக இந்திய அணி நான்கு கேள்விகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விட்டது. அப்போட்டியில் விராட் கோலி 82 ரன்கள் அடித்திருந்தார். இதுதான் இந்தியாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது.

போட்டி நடந்து முடிந்து ஒரு மாதத்திற்கும் மேலாக ஆகிவிட்டது. தற்போது வரை அதனை மறக்காமல் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் விராட் கோலி. அவர் பதிவிட்டதாவது:

“அக்டோபர் 23, 2022 நாளிற்கு என் மனதில் சிறப்பான இடமுண்டு. அப்படி ஒரு எனர்ஜியை இதற்கு முன் எந்த கிரிக்கெட் போட்டியிலும் நான் உணர்ந்தது இல்லை. மிகச்சிறந்த மாலை நேரம் அது.” என பதிவிட்டிருந்தார்.

உலககோப்பைக்கு முன்பு வரை விராட் கோலி சிறப்பான ஃபார்மில் இல்லை என்ற பல விமர்சனங்களும் வந்த வண்ணம் இருந்தன. அதை அப்படியே மாற்றி அமைத்து, “நான் இன்னும் இருக்கிறேன்.” என்றவாறு அவர் ஆடிய விதம் இருந்தது. இது பலரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.