இந்தியா – பாகிஸ்தான் கேம் இப்படிப்பட்டது தான் – பரம எதிரணியை பற்றி பேசிய கேப்டன் ரோகித் சர்மா!

0
113

ஆசிய கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் ரோகித் சர்மா பேசியுள்ளார்.

15வது ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. ஆகஸ்ட் 27ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 11ஆம் தேதி வரையில் நடைபெறும் இந்த தொடரில் பங்கிற்கவுள்ள இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இலங்கை அணி இன்னும் தங்களது வீரர்களின் பட்டியலை வெளியிடவில்லை.

- Advertisement -

ஆகஸ்ட் 27ம் தேதி துவங்க உள்ள தொடரின் முதல் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் இரு அணிகளும் மோதுகின்றன. ஆகஸ்ட் 28ம் தேதி நடக்கும் போட்டியில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கடைசியாக இந்த இரு அணிகளும் 2021 டி20 உலக கோப்பை தொடரில் மோதின. அதில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில வெற்றி பெற்றது.

10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த இரு அணிகளுக்கு இடையேயான இருதரப்பு தொடர் நடைபெற்று வந்தது. அதன்பிறகு இரு நாடுகளுக்கு நடுவே நடந்துவரும் எல்லைப்போர் மற்றும் சில அரசியல் காரணங்களுக்காக இருதரப்பு தொடர் தடைப்பட்டது. ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே இந்த இரு அணிகளும் தற்போது வரை மோதி வருகின்றன.

சமீபத்திய பேட்டியில் இந்த இரு அணிகள் மோதவிருக்கும் போட்டி எத்தகையது? மற்றும் இந்திய அணியினர் அதை எவ்வாறு எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்? என்பது குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேட்டியளித்தார். “இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டியை யாரும் தவறாமல் பார்த்துவிடுவார். சந்தேகத்திற்கு இடம் இன்றி மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்கக்கூடிய போட்டியாக இது இருக்கும். ஆனால் வீரர்கள் மத்தியில் நல்ல மனநிலையை உருவாக்குவதற்கு ராகுல் டிராவிட் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். மற்ற போட்டிகளைப் போல இதுவும் இன்னொரு போட்டி என்றவாறு அணுகுவதற்கு அறிவுரை கொடுத்து வருகிறார். வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் போட்டியில் மட்டுமே கவனத்தை செலுத்துவதற்கு திட்டமிட்டு வருகிறோம்.” என தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

- Advertisement -

உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் அதுவரை தோல்வியை தழுவியதில்லை. நடந்து முடிந்த 2021 டி20 உலக கோப்பையில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதுவே உலககோப்பையில் பெற்ற முதல் தோல்வியாகும். அப்போது இந்திய அணிக்கு கேப்டனாக விராட் கோலி இருந்தார். இம்முறை ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்துகிறார். முதல் முறையாக இந்திய அணியை மிகப்பெரிய தொடரில் ரோஹித் சர்மா வழி நடத்துகிறார். அவரின் அணுகுமுறை தற்போது வரை இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தந்திருக்கிறது. ஆசிய கோப்பையில் அவரது கேப்டன் பொறுப்பு எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு பலரும் ஆவலாக இருக்கின்றன.

ஐபிஎல் போன்ற மிகப்பெரிய தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தி ஐந்து முறை கோப்பையை பெற்று தந்திருக்கிறார் ரோகித் சர்மா. ஆகையால் ரோகித் சர்மாவிற்கு இது போன்ற அழுத்தம் நிறைந்த தொடர் புதிதல்ல.