பங்களாதேஷ் அணி தற்பொழுது நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை வென்று ஏற்கனவே நியூசிலாந்து தொடரை கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் முதலில் ஃபீல்டிங் செய்ய முடிவு செய்தது. அவர்களின் இந்த முடிவு மிகவும் சரியான ஒன்றாக அவர்களுக்கு அமைந்தது.
பங்களாதேஷின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் நியூசிலாந்து தங்கள் சொந்த நாட்டில் சீட்டுக்கட்டு சரிவது போல சரிந்தார்கள். வில் யங் 26, டாம் லாதம் 21, ஜோஸ் கிளார்க்சன் 16, அசோக் ஆதித்யா 10, என நால்வர் மட்டுமே இரட்டை இலக்கத்தை தொட்டார்கள்.
நியூசிலாந்தின் ஏழு பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. 31.4 ஓவரில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 98 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சோரிஃபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப் மற்றும் சௌமியா சர்க்கார் ஆகிய மூவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த பங்களாதேஷ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் சௌமியா சர்க்கார் 4 ரன் எடுத்து ரிட்டையர்டு ஹர்ட் ஆனார், அனாமுல் ஹக் 37 ரன்கள் எடுக்க, கேப்டன் நஜீபுல் ஹுசைன் சாந்தோ ஆட்டம் இழக்காமல் 51 ரன்கள் எடுத்தார்.
பங்களாதேஷ் அணி வெறும் 15.1 இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. தற்பொழுது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவுக்கு வந்திருக்கிறது. பங்களாதேச அணிக்கு எதிராக சொந்த நாட்டில் நியூசிலாந்துக்கு இது மிக மோசமான தோல்வி ஆகும்!