நியூசிலாந்து பாகிஸ்தான் டி20 தொடர்: இந்தியாவில் எந்த சேனலில் பார்க்கலாம்.?. தொடங்கும் நாள் நேர விபரங்கள்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் முடிவடைந்துவிட்ட நிலையில், அடுத்தக் கட்ட கிரிக்கெட் தொடர்கள் தொடங்கப்படவுள்ளது. இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் தொடருக்கு தயாராகி வரும் சூழலில், பாகிஸ்தான் அணி டி20 தொடரில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு விளையாடவுள்ளது. நியூசிலாந்து மண்ணில் நடக்கும் இந்த டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியின் இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

நட்சத்திர வீரர்களான பாபர் அசாம் மற்றும் கேப்டன் முகமது ரிஸ்வான் இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சல்மான் ஆகா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் பாகிஸ்தான் அணியின் துணைக் கேப்டன் பதவி ஷடாப் கானுக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த டி20 தொடருக்கு பின் ஷடாப் கான் பாகிஸ்தான் அணியில் இருந்தே நீக்கப்பட்டிருந்தார்.

2ம் கட்ட நியூசிலாந்து அணி

தற்போது மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளதோடு, அவருக்கு துணைக் கேப்டன் பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நியூசிலாந்து அணியும் 2ம் கட்ட அணியையே தேர்வு செய்து வைத்துள்ளது. நியூசிலாந்து அணியின் கேப்டனாக நட்சத்திர ஆல்ரவுண்டர் பிரேஸ்வெல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

நியூசிலாந்து அணியின் சீனியர்கள் மற்றும் நட்சத்திர வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருப்பதால், நியூசிலாந்து அணி இரண்டாம் கட்ட அணியை தேர்வு செய்து இருக்கிறது. நியூசிலாந்து மண்ணில் நடக்கும் இந்த டி20 தொடர் மொத்தமாக 5 போட்டிகள் கொண்ட தொடராக நடக்கவுள்ளது. நாளை மறுநாள் முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடக்கவுள்ளது.

நேரடி ஒளிபரப்பு எப்போது?

மார்ச் 18ம் தேதி 2வது டி20 ஆட்டம் டூனெதினிலும், 3வது டி20 போட்டி மார்ச் 21ம் தேதி ஆக்லாந்து மைதானத்திலும், 4வது டி20 போட்டி மார்ச் 23ம் தேதி பே ஓவல் மைதானத்திலும், மார்ச் 26ம் தேதி கடைசி டி20 போட்டி வெலிங்டன் மைதானத்திலும் நடக்கவுள்ளது. இந்த டி20 தொடரை இந்திய அணி ரசிகர்கள் நேரலை காண முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த டி20 தொடர் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. அதேபோல் ஓடிடியை பொறுத்தவரை சோனி லைவ் செயலியிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே நடக்கவுள்ளதால், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்த டி20 தொடருக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -
Published by

Recent Posts