37 வருட சாபத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நியூசிலாந்து அணி; தொடரில் கலக்கிய சிஎஸ்கே சிங்கங்கள்!!

0
118

37 வருடத்திற்கு பிறகு முதல் முறையாக மேற்கிந்திய தீவுகளில் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது நியூசிலாந்து அணி.

மேற்கிந்திய தீவுகளுக்கு சென்ற நியூசிலாந்து அணி மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது. அதனை தொடர்ந்து நடந்த ஒருநாள் போட்டிக்கான தொடரில் முதல் போட்டியை மேற்கிந்திய தீவுகள் அணி வென்றது. இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியை நியூசிலாந்து அணி கைப்பற்றி தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

- Advertisement -

பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அபாரமான துவக்கம் கிடைத்தது. துவக்க வீரர்கள் சாய் கோப் மற்றும் கைல் மேயர்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்து 173 ரன்கள் சேர்த்தனர். சாய் ஹோப் 51 ரன்கள், மேயர்ஸ் சதம் விளாசி 105 ரன்கள், கேப்டன் பூரான் அதிரடியாக விளையாடி 91 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இழக்க ரன்களில் வெளியேறினர். 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்ஸ் இழப்பிற்கு 301 ரன்கள் அடித்திருந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. சான்ட்னர் மிகச் சிறப்பாக பந்துவீசி இரண்டு விக்கெட்டுகளும் போல்ட் 3 விக்கெட்டுகளும் கைப்பாற்றினர்.

302 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு துவக்க வீரர் கப்தில் 57 ரன்களும், டிவான் கான்வாய் 56 ரன்களும் அடித்திருந்தனர். மிடில் ஆர்டரில் மிகச் சிறப்பாக விளையாடிய கேப்டன் டாம் லேத்தம் 69 ரன்களும், டேரல் மிச்சல் 63 ரன்களும் அடித்து ஆட்டம் இழந்தனர். இறுதிவரை நின்று ஆட்டத்தை முடித்துக்கொடுத்த ஜேம்ஸ் நீசம் 11 பந்துகளில் 34 ரன்கள் அடித்தார். 47.1 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிறகு 307 ரன்கள் எடுத்த நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. அத்துடன் 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. இத்தொடரில் சிறப்பாக செயல்பட்ட சான்டனர் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

1985 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று முதல் முறையாக ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி விளையாடியது. அப்போது 0-5 என படுதோல்வியை சந்தித்தது. கடைசியாக 2012 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று விளையாடிய தொடரிலும், 1-4 என தோல்வியை தழுவியது. 1985 ஆம் ஆண்டில் துவங்கிய இந்த மோசமான சாதனை 37 ஆண்டுகளுக்கு பின்னர் முடிவுக்கு வந்திருக்கிறது. மேற்கிந்திய தீவுகள் மண்ணில் நியூசிலாந்து அணி முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றுகிறது.

- Advertisement -

இதுவரை மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று நியூசிலாந்து அணி பங்கேற்ற ஒருநாள் தொடரின் பட்டியல்: