அனைத்து வடிவிலான போட்டிகளிலும் தரவரிசையில் நம்பர் 1 இடம் பிடித்த மூன்று பேட்ஸ்மேன்கள்

0
4837
Ricky Ponting

ஐ.சி.சி தரவரிசை முதன் முதலாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்காகத் தொடங்கப்பட்டது பிறகு 1998 ஆம் ஆண்டு ஒருநாள் அணிக்கான தரவரிசை அறிமுகப்படுத்தப்பட்டது.தரவரிசை பொறுத்த வரை மூன்று பிரிவுகளாக கொண்டிருக்கும் (பேட்ஸ்மேன், பவுலர் மற்றும் ஆல்-ரவுண்டர்). குறிப்பிட்ட பிரிவுகளில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் அந்தந்த பிரிவுகளின் தரவரிசையில் இடம் கொடுக்கப்படும்.டி-20 கிரிக்கெட்டின் குறுகிய கால வளர்ச்சியும் அதிகப்படியான சர்வதேச அணிகளும் டி-20 கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கியதும் ஐ.சி.சி டி-20 யையும் ஐ.சி.சி தரவரிசையில் சேர்த்தது.

தற்போதய டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் பேட்ஸ்மேன் பட்டியலில் கனே வில்லியம்சன் , பவுலர் பட்டியலில் பேட் கம்மின்சன், மற்றும் ஆல்-ரவுண்டர் பட்டியலில் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர் . ஒருநாள் வடிவிலான தரவரிசையில் பேட்ஸ்மேன் பட்டியலில் பாபர் ஹசம் , பவுலர் பட்டியலில் டிரெண்ட் பெளல்ட் மற்றும் ஆல்ரவுண்டர் பட்டியலில் ஷாகிப் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் , டி-20 வடிவிலான தரவரிசையில் பேட்ஸ்மேன் பட்டியலில் டேவிட் மலன் , பவுலர் பட்டியலில் ஷம்ஷி , ஆல்ரவுண்டர் பட்டியலில் முகமது நபி ஆகியோர் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

- Advertisement -

டெஸ்ட் , ஒருநாள் மற்றும் டி-20 இந்த மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் நிறைய முன்னனி வீரர்கள் முதலிடத்தை பிடித்திருந்தாலும் மூன்று வடிவிலான போட்டிகளிலும் முதலிடம் பிடிக்கவில்லை . கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுவரை மூன்று வீரர்கள் மட்டுமே மூன்று வடிவிலான கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளனர் . யார் அந்த கிரிக்கெட் வீரர்கள் என்று பார்ப்போம்.

3.ரிக்கி பாண்டிங்

ஆஸ்திரேலிய அணியின் வெற்றிகரமான கேப்டன் என்றால் ரிக்கி பாண்டிங் நிச்சயம் அதில் இருப்பார் இவரின் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது . இவர் சிறந்த கேப்டனாக மட்டுமல்லாமல் சிறந்த வீரராகவும் அன்றைய காலகட்டத்தில் திகழ்ந்தார். 2005 டிசம்பர் முதல் 2006 ஜனவரி வரஒ 3 வடிவிலான கிரிக்கெட் தரவரிசையில் ஒரே நேரத்தில் முதலிடத்தில் இருந்த ஒரே பேட்ஸ்மேன் என்ற பெருமை இவருக்கு மட்டுமே

ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 13378 ரன்களையும், ஒருநாள் போட்டிகளில் 13704 ரன்களையும் குவித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் 71 சதங்களை அடித்து ஒரு டிகேட்டையே தனது ஆதிகத்தில் வைத்திருந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது .

- Advertisement -

2.மேத்யூவ் ஹைடன்

Matthew Hayden

ஆஸ்திரேலிய அணியின் எவர் கிரீன் பேட்ஸ்மேன் லிஸ்ட் எடுத்து பார்த்தால் மேத்யூவ் ஹைடன் நிச்சயம் அந்த லிஸ்டில் இருப்பார். ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளிலும் , 161 ஒருநாள் போட்டிகளிலும் 9 டி-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். தனது கிரிக்கெட் கெரியர் முடிவடையும் தருவாயில் சர்வதேச டி-20 அறிமுகமானதால் 9 போட்டிகள் மட்டுமே அவரல் விளையாட முடிந்தது . இருப்பினும் அந்த 9 போட்டிகளில் 4 அரைசதங்களுடன் சராசரி 51 ஆக இருந்தது . 2003ஆம் ஆண்டு மைதானத்தில் ஜிம்பாவே அணிக்கு எதிராக 380 ரன்களை விளாசினார் ஆஸ்திரேலிய அணியின் தனிப்பட்ட நபரின் அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையை கையில் வைத்துள்ளார் . ஆஸ்திரேலிய அணிக்காக 40 சதங்களுடன் 15000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேனான இவர் ஐ.சி.சியின் அனைத்து வடிவிலான தரவரிசையிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளார் , ஆனால் ஒரே நேரத்தில் அல்ல. இவர் 2012 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார், மேலும் 2017 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார்.

1.விராட் கோலி

குறுகிய கால கட்டத்தில் தனது அற்புதமான பேட்டிங் திறமையினால் இன்றைய கிரிக்கெட் வீரர்களில் முக்கியமான வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளார் . இதுவரை ஒருநாள் போட்டிகளில் 12000+ ரன்களையும் டெஸ்ட் போட்டிகளில் 7500+ ரன்களையும் குவித்துள்ளார் . அதிகப்படியான சதம் அடித்த பேட்ஸ்மேன் பட்டியலில் 70 சதங்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
கடைசியாக சச்சின் டெண்டுல்கர் ஜூன் மாதம் 2011 ஆம் ஆண்டு டெஸ்டில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்தார் அவருக்கு பிறகு விராட் கோலி டெஸ்டில் நம்பர் ஒன் பேட்மேன் என்ற அந்தஸ்தைப் பெற்ற ஏழாவது இந்திய பேட்ஸ்மேன்கள் பெருமையை தக்க வைத்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த விராட் கோலி வெவ்வேறு காலகட்டத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட் தரவரிசையிலும் முதலிடத்தில் இருந்தார் . இச்சாதனையை அடைந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை தன்வசமாக்கினார்.

தற்போது நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்பட்டு வாழ்வதினால் விராட் கோலி பின்தள்ளி டெஸ்ட் நம்பர் பேட்ஸ்மேனாக வந்துள்ளார் அதேபோல ஒரு நாள் போட்டிகளில் பாகிஸ்தானை சேர்ந்த பாபர் அசம் முதலிடத்தில் வகிக்கிறார் . டி20 களில் இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் மலன் முதலிடத்தில் உள்ளார்