இந்தியாவுக்கு எதிராக பெரிதாக ஒன்றும் செய்ய தேவை இல்லை – தென்னாப்பிரிக்கா பவுலர் அலட்சிய பேச்சு!

0
5221
Ind vs Sa

நாளை டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் மூன்று போட்டிகள் நடைபெற உள்ளன. ஜிம்பாப்வே, பங்களாதேஷ் அணியை எதிர்த்து பிரிஸ்பேனிலும், இதற்கடுத்து பெர்த் மைதானத்தில் நெதர்லாந்து அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணியும், இதற்கு அடுத்து இதே மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து இந்திய அணி மோதும் போட்டி மாலை 4 மணிக்கு நடக்க இருக்கிறது.

இதில் முதலில் நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியை ஜிம்பாப்வே அணி வெல்லும் பட்சத்தில் அரையிறுதி வாய்ப்பில் இருக்கும். நெதர்லாந்து அணி உடனான ஆட்டத்தில் பாகிஸ்தான அணி வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் தொடர முடியும்.

- Advertisement -

இந்தியா தென் ஆப்பிரிக்கா மோதும் மூன்றாவது போட்டியில் இந்தியா வென்றால் இந்தியா ஏறக்குறைய அரை இறுதிக்கு சென்று விடும். அதே சமயத்தில் தென் ஆப்பிரிக்கா வென்றால் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு சுத்தமாக மழுங்கிவிடும். மேலும் ஜிம்பாப்வே இந்தியா மோதும் போட்டிக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் உருவாகும்.

இப்படியான காரணங்களால் நாளை இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ள போட்டிக்கு முக்கியத்துவம் அதிகரிக்கிறது. இந்தப் போட்டி தற்பொழுது உலகக் கோப்பை தொடரில் வேகப்பந்து வீச்சுக்கு அதிக சாதகமாக இருக்கும் பெர்த் மைதானத்தில் நடப்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்க அணியில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ந்து வீசக்கூடிய அன்றிச் நோர்க்கியா இருக்கிறார். மேலும் ரபடா, பர்னல் போன்ற மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசக்கூடிய வேகப்பந்துவீச்சாளர்களும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள ஆட்டம் குறித்து நாளைய ஆட்டத்தில் விளையாட உள்ள தென்னாப்பிரிக்க அதிவேக பந்துவீச்சாளர் அன்றிச் நோர்க்கியா தனது கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

அவர் கூறும் பொழுது “இந்த மைதானத்தில் நடந்த இரு போட்டிகளை நாம் பார்க்கும் பொழுது, இந்த மைதான ஆடுகளத்தில் நல்ல வேகமும் பவுன்சும் இருக்கிறது. நாங்கள் இந்த ஆட்டத்தில் என்ன லைன் அண்ட் லென்த்தில் வீச வேண்டும் என்பதை மட்டுமே கண்டறிய வேண்டும். பெரிய ஆடம்பரமான முயற்சிகள் எதையும் நாங்கள் செய்யத் தேவையில்லை. எங்கள் அடிப்படை விஷயங்களிலும் கட்டுப்பாடுகளையும் நாங்கள் கடைபிடிக்க வேண்டும். இதைச் செய்து விக்கட்டுகளை விரைவாக பெற வேண்டும். அதே சமயத்தில் ரன்னை கட்டுப்படுத்த வேண்டும் ” என்று கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய தென்னாப்பிரிக்க அதிவேக பந்துவீச்சாளர் அன்றிச் நோர்க்கியா “பந்து வீச்சில் எங்களிடம் பல்வேறு வகைகள் உள்ளன. நாங்கள் பல அம்சங்களை உள்ளடக்கி வைத்திருக்கிறோம். எங்கள் தாக்குதல் பலதை கட்டுப்படுத்தக் கூடியது. எந்த அணிகளை காட்டிலும் எங்களிடம் மிகச் சிறந்த வேகப்பந்துவீச்சு தாக்குதல் கூட்டணி இருக்கிறது. இதைக் கொண்டு நாங்கள் அந்த நாளில் என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாகச் செய்வோம்” என்று நம்பிக்கையாக பேசியிருக்கிறார்.