ரோஹித், ராகுல் இருவரும் தேவையில்லை ; புதிய டெஸ்ட் கேப்டன் பதவிக்கு இவர் சரியாக இருப்பார் – அடித்துச் சொல்லும் கவாஸ்கர் & யுவராஜ் சிங்

0
5433
Sunil Gavaskar Tweet about Indian Test Captain

கடந்த ஆண்டு விராட் கோலி டி20 போட்டிகளில் ( இந்திய அணியில் மற்றும் ஐபிஎல் தொடர்களில் )நான் இனி கேப்டனாக தொடரப் போவதில்லை என்று முதலில் ஒரு அதிர்ச்சி அளித்தார். பின்னர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அவர் கேப்டனாக இருப்பார் என்று நினைத்த வேளையில், பிசிசிஐ திடீரென ரோஹித் ஷர்மாவை ஒருநாள் போட்டிகளுக்கான புதிய கேப்டனாக நியமித்தது. இது அவரது ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியை கொடுத்தது.

இனி டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே விராட் கோலி கேப்டனாக நீடிப்பார் என்ற கவலையில் அவரது ரசிகர்கள் இருந்த மத்தியில், நேற்று டெஸ்ட் போட்டிகளிலும் நான் இனி கேப்டனாக தொடரப் போவதில்லை என்று அந்த பதவியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி அவரது ரசிகர்களை மேலும் கவலை அடையச் செய்துள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, நேற்று இவ்வாறு அவர் கூறியது அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. ஒருபக்கம் விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து வெளியேற மறுபக்கம் இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டன் பதவிக்கு எந்த வீரர் சரியான தேர்வாக இருப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது

இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டன் பதவிக்கு ரிஷப் பண்ட் சரியான தேர்வாக இருப்பார்

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தற்பொழுது ரிஷப் பண்ட்டை புதிய டெஸ்ட் கேப்டனாக பிசிசிஐ நியமிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ரோஹித் ஷர்மாவிற்கு கேப்டன் பதவி கிடைத்ததும் அவர் கூடுதல் பொறுப்புடன் நிதானமாக அதே சமயம் சிறப்பாக விளையாடியதை நாம் பார்த்திருக்கிறோம்.100 மற்றும் 200 ரன்கள் என ஒரு கேப்டனாக அவர் சிறப்பாக ஸ்கோர்செய்தார்.

அதேபோல ரிஷப் பண்ட்டிற்கு கேப்டன் பதவி கிடைக்கப் பெற்றால் நிச்சயமாக அவர் கூடுதல் கவனத்துடன் பொறுப்பாக விளையாட நிறைய வாய்ப்பு உள்ளது. அதிரடியாக விளையாடும் அவரும் 100 மற்றும் 200 ரன்கள் குவிக்க, சிறந்த உத்வேகமாக அது இருக்கும். எனவே புதிய கேப்டன் பதவிக்கு ரிஷப் பண்ட் சரியான தேர்வாக இருப்பார் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

- Advertisement -

யுவராஜ் சிங் விருப்பமும் அதுதான்

சுனில் கவாஸ்கர் கூறியதை வழிமொழிந்து நிச்சயமாக அது சரியான முடிவாக இருக்கும் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஒரு விக்கெட் கீப்பராக போட்டி முழுவதும் ஸ்டும்ப்பிற்கு பின்னாலிருந்து ஆட்டத்தை உணர்ந்து சிறப்பாக அணியை வழிநடத்த அதிக வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார்.

சுனில் கவாஸ்கர் யுவராஜ்சிங் மட்டுமின்றி பல்வேறு முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முன்னணி கிரிக்கெட் வல்லுனர்கள் பல்வேறு ஆலோசனைகளை முன்வைக்க, பிசிசிஐ என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் போட்டி இலங்கை அணிக்கு எதிராக வருகிற பிப்ரவரி 25-ஆம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.