முக்கிய சவுத் ஆப்ரிக்கா வீரர்கள் விலகல் – தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற இந்தியாவுக்கு அரிய வாய்ப்பு

0
1081
Nortje Ruled Out Off Ind vs Sa Test Series

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற டிசம்பர் 26ம் தேதி தொடங்குகிறது. தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்றுள்ள டெஸ்ட் தொடர் வரலாற்றில் இதுவரை இந்திய அணி ஒருமுறைகூட தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதில்லை.
அந்த ஒரு குறையை இந்த முறை இந்திய அணி நிறைவு செய்யும் என்று இந்திய ரசிகர்களும் அனைவரும் இந்த டெஸ்ட் தொடரை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளின் வீரர்கள் பட்டியல் இரு அணி நிர்வாகத்தின் மூலமாக சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. தென்ஆப்பிரிக்க அணியில் ரபாடா மற்றும் நோர்ஜே இருவரும் இடம் பெற்று இருந்தனர். இவர்கள் இருவருமே இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீச கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

காயம் காரணமாக டெஸ்ட் போட்டியிலிருந்து நோர்ஜே விலகல்

போட்டி ஆரம்பிக்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் தற்போது நோர்ஜே காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். இந்த செய்தி அனைத்து இந்திய ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது. அந்த அணியில் தற்போது அனுபவமுள்ள ஒரு வேகப்பந்து வீச்சாளராக ரபாடா மட்டுமே இருக்கிறார். எனவே இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை நிச்சயம் சமாளித்து விடும் என்கிற நம்பிக்கையில் இந்திய ரசிகர்கள் இருக்கின்றனர்.

மேலும், விக்கெட் கீப்பர் டி காக் 2வது மற்றும் 3வது டெஸ்ட்டில் இருந்து விலகியுள்ளார். தனது முதல் குழந்ததையுடன் நேரத்தை கழிக்க விரும்பி அவர் விடுப்பு எடுக்கிறார். இருப்பினும் ரபாடா உடன் ஹான்ட்ரிக்ஸ், கேஷவ் மஹராஜ், லுங்கி இங்கிடி, ஒலிவியர் மற்றும் முல்டர் என சிறப்பான பந்து வீச்சாளர்கள் இருக்கையில் இந்திய அணி சற்று போராடினால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்று ஒரு சிலர் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பார்வையாளர்கள் இன்றி நடைபெறப்போகும் டெஸ்ட் தொடர்

இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகங்கள் இணைந்து இந்த டெஸ்ட் தொடரில் எந்தவித பார்வையாளர்களுமின்றி மூடப்பட்ட மைதானத்தில் போட்டி நடக்கும்படி ஏற்பாடு செய்துள்ளனர். எனவே ரசிகர்கள் அனைவரும் தங்களது தொலைக்காட்சி வாயிலாக மட்டுமே இந்த போட்டியை கண்டுகளிக்க முடியும்.

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடரை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்ப போகிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26ஆம் தேதி ஞாயிறு அன்று பகல் 1:30மணிக்கு ஆரம்பிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது .