“இங்க எவனும் நல்லவன் இல்லை” – பால் டாம்பெரிங் சர்ச்சை குறித்து டேவிட் வார்னர்

0
287
david warner

கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலியா அணி’ டான் பிராட்மேன்’ முதல்  ‘ஸ்டீவன் ஸ்மித்’ வரை  பல்வேறு விதமான  கிரிக்கெட் ஜாம்பவான்களை  சர்வதேச கிரிக்கெட்டிற்கு அளித்துள்ளது. அவர்களின் ஒருவர் தான்  ‘டேவிட் வார்னர் ‘ ஆரம்பத்தில்  t20 ஸ்பெசலிஸ்ட் ஆக பார்க்கப்பட்ட இவர்  பின்னாளில்  டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில்  மகத்தான ஒரு வீரராக உருவெடுத்தார்.

தனது சர்வதேச  கிரிக்கெட் வாழ்க்கையைத் துவங்குவதற்கு  முன்பாக  டேவிட் வார்னர், ஒரு முதல் தரப் போட்டியில் கூட ஆடவில்லை, என்பதிலிருந்து  அவர் எவ்வளவு திறமையான வீரர் என்பதை அறிந்து கொள்ளலாம் . எந்த முதல் தரம் போட்டிகளிலுமே ஆடாமல்  நேரடியாக ஆஸ்திரேலிய அணிக்காக  தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கியவர் .

- Advertisement -

2009 ஆம் ஆண்டு  தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான  டி20 கிரிக்கெட் போட்டியின் மூலம்  சர்வதேச கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமானார்.டேவிட் வார்னர் , அதன்பிறகு  அதே தொடரின் ஒரு நாள் போட்டியில்  அறிமுகப்படுத்தப்பட்டார். சர்வதேச மற்றும்  உலகெங்கிலும் நடக்கும்  லீக் கிரிக்கெட்டுகளின் மூலம்  தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தி,  உலக கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும்  கிரிக்கெட் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தார்.

ஆஸ்திரேலியா அணியின் அடுத்த கேப்டனாக  டேவிட் வார்னர்  வருவார், என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2018 ஆம் ஆண்டு  தென் ஆப்பிரிக்காவில் நடந்த  போட்டியின் போது  பந்தை சேதப்படுத்தியதாக  வார்னர், ஸ்மித்  ஆகிய இருவரும் ஆஸ்திரேலியாவில் இருந்து நீக்கப்பட்டு   இருவருக்கும்  கேப்டன் பொறுப்பு  வகிக்க  வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

இந்த 2018 ஆம் ஆண்டின் டெஸ்ட் தொடர் ஆனது  மிகவும்  சர்ச்சைக்குரியதாக அமைந்தது. முதல் டெஸ்ட் போட்டியின் போது  சவுத் ஆப்பிரிக்கா அணியின்  விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ‘டிக்காக்’மற்றும் டேவிட் வார்னர் இடையே  நடந்த மோதல்  பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்கி முடிவதற்கு முன்பாக  அதே தொடரின் இறுதி டெஸ்ட் போட்டியில்  ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இருவரும்  வேண்டுமென்றே திட்டமிட்டு  பந்தை சேதப்படுத்தியது  தகுந்த ஆதாரங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர்கள் இருவரும்  கேப்டன் மற்றும் துணை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு,  ஆஸ்திரேலியா அணியில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு  ஓராண்டு கிரிக்கெட் விளையாட  நிரந்தர தடையும் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இந்த தடையில் இருந்து மீண்டு வந்து ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் ஆஸ்திரேலியா அணிக்காக சிறப்பாக ஆடி 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது அணியை இறுதி போட்டி வரை அழைத்துச் சென்றனர் . தற்பொழுதும் இருவரும் நன்றாக ஆடி வருகின்றனர் . இந்நிலையில் டேவிட் வார்னர் தன்மீது விதிக்கப்பட்டிருந்த தடைக்கு எதிராக வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார் . ஆனால் அந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை என்று கூறி வழக்கு ரத்து செய்ததும் குறிப்பிடத்தக்கது .
2018 ஆம் ஆண்டு  அந்த டெஸ்ட் தொடரின் போது  கேப்டனாக இருந்த டிப்ளசிஸ்  நான் எழுதிய தன்னுடைய சுயசரிதையில்  டேவிட் பார்லரை மிகவும் கடுமையாக விமர்சித்து இருந்தார் . தற்போது தென்னாபிரிக்க ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் வேளையில்  பந்தை சேதப்படுத்திய சர்ச்சை தொடர்பாக  டேவிட்  வாரனரிடம்  கேட்கப்பட்டதற்கு, அது ஒரு மோசமான நிகழ்வு தான் என்றாலும் அதை நினைத்து தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று தெரிவித்தார் டேவிட் வார்னர் .

மேலும் இது குறித்து தொடர்ந்து பேசிய அவர் கிரிக்கெட்டில் நான் செய்வதற்கு முன்பு யாருமே பந்து சேதப்படுத்த வில்லையா என்று கேள்வி எழுப்பினார். தவறுகள் என்பவை நடப்பவை தான். அவற்றைத் திருத்திக் கொண்டு சென்று கொண்டே இருக்க வேண்டும் இங்கு யாரையும் குறை சொல்வதற்கு யாரும் நல்லவர்கள் இல்லை . நாங்கள் செய்தவற்றுக்கு எங்களுக்கான தண்டனையையும் அனுபவித்து விட்டோம். அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டோம்.மேலும் அதை நினைத்து இன்னும் வருத்தப்பட எதுவும் இல்லை என்று கூறி முடித்தார்.