விராட் கோலியும் இல்ல பாபரும் இல்ல; இவர் தான் பெஸ்ட் – மைக் ஹஸ்ஸி – வீடியோ இணைப்பு!

0
2839
Hussey

டி20 உலகக்கோப்பை போட்டி துவங்குவதற்கு முன்பாக, ஒரே குழுவில் இடம் பெற்றுள்ள மிகப் பெரிய அணிகளான இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் உலகக் கோப்பை நடக்கும் ஆஸ்திரேலியாவில் மோதியது ஆச்சரியமான ஒரு விஷயமே!

இந்தத் தொடரின் முதல் போட்டியில் காயத்திலிருந்து மீண்டு வந்த இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேலஸ் இருவரது அதிரடியால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இதற்கடுத்த இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியின் மூன்றாவது ஆட்டக்காரர் டேவிட் மலான் 49 பந்துகளில் 82 ரன்களை 7 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்களுடன் குவிக்க இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

இந்தப் போட்டி டேவிட் மலானுக்கு இங்கிலாந்து அணிக்காக சர்வதேச 50வது டி 20 போட்டியாகும். இதைச் சிறப்பிக்கும் விதமாக, அவருக்கு இங்கிலாந்து அணியில் ஊழியராக சேர்க்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பிரபல பேட்ஸ்மேன் மைக்கேல் ஹஸி தொப்பியை வழங்கினார். இந்த நிகழ்வின்போது அவர் சில விஷயங்களைக் குறிப்பிட்டு டேவிட் மலானை புகழ்ந்து பேசினார்.

மைக்கேல் ஹஸி டேவிட் மலான் பற்றி கூறும் பொழுது ” இங்கிலீஷ் தொப்பியை நான் கையில் வைத்திருப்பது நான் வாழ்க்கையில் எப்பொழுதும் செய்ய நினைக்காத ஒன்று. இன்று இங்கிலாந்து அணிக்காக ஐம்பதாவது சர்வதேச டி20 போட்டியில் விளையாடும் டேவிட் மலானுக்கு எனது வாழ்த்துக்கள். உங்களது டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்கனவே மிகச் சிறப்பான விஷயங்கள் நிறைய நடந்துள்ளன. இங்கிலாந்து அணிக்கான 4 சதங்களில் ஒன்று உங்களிடம் இருந்து வந்திருக்கிறது. அலெக்ஸ்க்கு பிறகு டி-20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நீங்கள் நம்பர்-1 பேட்ஸ்மேனாக நீண்டகாலம் இருந்திருக்கிறீர்கள். மேலும் டி20 கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை விரைவாக அடித்து இருக்கிறீர்கள். நீங்கள் விராட் கோலி மற்றும் பாபரை விட வேகமாக ரன் கொண்டு வந்ததில் சிறந்தவர் என்று நான் நம்புகிறேன் ” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய மைக் ஹஸ்ஸி
” இந்தச் சுற்றுப் பயணம் முழுவதும் கேப்டன் ஜாஸ் பட்லர் கூறியது போல, நாம் முன் கூட்டி இருக்க வேண்டும். நம் முன்னால் இருக்கும் அந்தந்த ஆட்டத்திற்கு முக்கியத்துவம் தந்து விளையாட வேண்டும். அடுத்து ஒன்பது பத்து ஆட்டங்கள் நீங்கள்தான் முன்னோக்கிச் செல்வீர்கள் என்று நான் நம்புகிறேன். தனிப்பட்ட முறையிலும் நீங்கள் நிறைய வெற்றிகளை பெறுங்கள். மிக முக்கியமாக இன்னும் ஒரு மாத காலத்தில் டி20 உலகக் கோப்பையை வென்ற பதக்கம் உங்கள் கழுத்தில் இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று வாழ்த்தி கூறியிருக்கிறார்.