நோ ப்ராப்ளம் என்ன எழுதி இருக்கோ அதுதான் நடக்கும் – ஃபாஸ்ட் ப்யூரியஸ் சிராஜ் மாஸ் இன்டர்வியூ!

0
697
Siraj

இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த ஆண்டை உள்நாட்டில் இலங்கை அணியை வைத்து மிக வெற்றிகரமாத் துவங்கி இருக்கிறது. ஹர்திக் பாண்டியா தலைமையில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என கைப்பற்றியது.

இதற்கு அடுத்து ரோகித் சர்மா தலைமையில் களம் கண்ட இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை முழுமையாக கைப்பற்றி என்று அசத்தியிருக்கிறது.

- Advertisement -

இந்த தொடரில் விராட் கோலி முதல் மற்றும் மூன்றாவது ஆட்டத்தில் சதம் அடித்து அசத்தியிருக்கிறார். துவக்க ஆட்டக்காரராக தொடர்ந்து வாய்பளிக்கப்பட்ட இளம் வீரர் கில் ஒரு அரை சதம் மற்றும் ஒரு சதம் அடித்து தனது வாய்ப்புக்கு நியாயம் செய்திருக்கிறார்.

இன்னொரு புறத்தில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இல்லாத நிலை இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்பட்டது. ஆனால் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்திற்கு மிகப்பெரிய நம்பிக்கை அளிக்கும் விதமாக இந்த தொடரில் முகமது சிராஜ் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.

கடந்த சில மாதங்களாக அவரது பந்துவீச்சு மிகச் சிறப்பான முறையில் முன்னேறி உள்ளது. ஒருநாள் போட்டிகளில் மட்டும் இந்திய அணிக்காக வெள்ளைப் பந்தில் களம் காணும் முகமது சிராஜ் மூன்று ஆட்டங்களில் முதல் ஆட்டத்தில் இரண்டு விக்கெட், இரண்டாவது ஆட்டத்தில் மூன்று விக்கெட் மூன்றாவது ஆட்டத்தில் நான்கு விக்கெட் என மொத்தம் ஒன்பது விக்கெட்டுகளை எடுத்து அசத்தியிருக்கிறார். புதிய பந்தில் அதிக விக்கட்டுகளை எடுத்த வீரராக அவர் தொடர்ந்து இருந்து வருகிறார். இவரது இந்த செயல்பாடு மொத்த இந்திய அணிக்கும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

- Advertisement -

இன்றைய ஆட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு 10 ஓவர்கள் பந்து வீசி ஒரு மெய்டன் செய்து 32 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். வெற்றிக்குப் பிறகு பேசிய அவர் ” நான் ஐந்தாவது விக்கட்டுக்காக கடுமையாக முயற்சி செய்தேன். ஆனால் நீங்கள் எவ்வளவு கடுமையாக முயற்சி செய்தாலும் உங்களுக்கு என்ன எழுதப்பட்டு இருக்கிறதோ அது மட்டும் தான் கிடைக்கும். என் ரிதம் நீண்ட நாட்களாக நன்றாக இருந்து வருகிறது. நான் அவுட் ஸ்விங் பந்துவீச்சில் வேலை செய்து வருகிறேன் மேலும் வாபுல் ஸீம் பந்து வீச்சிலும் கவனம் செலுத்தி வருகிறேன். என் கேப்டன் ரோஹித் சர்மா நான் ஐந்து விக்கெட்டுகளை எடுக்க கடுமையாக முயற்சித்தார்” ஆனால் நடக்கவில்லை என்று கூறியிருக்கிறார்!