நட்ராஜனுக்கு இடம் இல்லை – விஜய் ஹசாரே தொடருக்கான 20 பேர் கொண்ட தமிழக அணி அறிவிப்பு

0
195
Washington Sundar Dinesh Karthik and Natarajan

தமிழகத்தைச் சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் அணி சில நாட்களுக்கு முன்பு நடந்த பரபரப்பான சையது முஷ்டாக் அலி தொடரின் இறுதிப்போட்டியில் கர்நாடக அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தோல்வியை தழுவி விடுமோ என்று கடைசி நேரத்தில் பார்த்துக்கொண்டு இருந்தார் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்குமாறு தமிழக வீரர் ஷாருக்கான் அடித்த சிக்ஸர் அமைந்தது. ஒரு பந்துகளில் 5 ரன்கள் வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் ஷாருக்கான் சிக்சர் அடித்து வெற்றி பெற்றுக் கொடுத்தார். இதன் மூலம் சையது முஷ்டாக் அஅலி தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அணி என்ற பெருமையைப் பெற்றது தமிழக அணி.

தற்போது இது முடிந்த கையோடு அடுத்த மாதம் நடக்க உள்ள விஜய் ஹசாரே தொடருக்கு தமிழக அணி தயாராகி வருகிறது. காயம் காரணமாக சையது முஷ்டாக் தொடரில் பங்கேற்க இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் விஜய் ஹசாரே தொடருக்கு மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த வாஷிங்டன் சுந்தரும் தினேஷ் கார்த்திக் உடன் இணைந்து அணிக்குத் திரும்பியுள்ளார். விரலில் ஏற்பட்ட காயத்தால் இங்கிலாந்து தொடர் மற்றும் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பகுதி போன்றவற்றில் சுந்தர் பங்கேற்காமல் இருந்தார். தற்போது இவரும் அணிக்கு திரும்பி இருப்பது தமிழக அணி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

- Advertisement -

மற்றொரு தமிழக வீரரான பாபா அப்பரஞ்சித் தற்போது தென் ஆப்பிரிக்கா நாட்டில் இந்திய ஏ அணிக்காக விளையாடி வருகிறார். அந்த தொடர் முடிந்த பிறகு தான் அவர் இந்த அணியில் விளையாடுவாரா இல்லையா என்பது தெரியவரும். இவரது சகோதரரான பாபா இந்திரஜித் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் தமிழக வீரர் நடராஜனுக்கு காயம் காரணமாக ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

தினேஷ் கார்த்திக் அணிக்குத் திரும்பி விட்டாலும் சையது முஷ்டாக் தொடரில் சிறப்பாக வழி நடத்திய விஜய் சங்கர் இந்த அணிக்கும் கேப்டனாக செயல்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. பரோடா, கர்நாடகா, பெங்கால், பாண்டிச்சேரி போன்ற வலுவான அணிகளுடன் தமிழக அணியும் விஜய் ஹசாரே தொடரில் இடம் பிடித்துள்ளது.

விஜய் ஹசாரே தொடருக்கான தமிழக அணி – விஜய் சங்கர், ஜெகதீசன், தினேஷ் கார்த்திக், ஹரி நிஷாந்த், ஷாருக்கான், சாய் கிஷோர், முருகன் அஸ்வின், பாபா இந்திரஜித், சந்திப் வாரியர், வாஷிங்டன் சுந்தர், சித்தார்த், சாய் சுதர்சன், கங்கா ஸ்ரீதர், முகமது, சரவணகுமார், சூரியபிரகாஷ், சஞ்சய், கவுசிக் காந்தி மற்றும் சிலம்பரசன்

- Advertisement -