விராட் கோலி-க்கு தலை வணங்குகிறேன்; நான் அவருக்கு நிகரானவன் இல்லை – தலைக்கனம் இல்லாமல் பேசிய ஃபாப் டு ப்ளஸிஸ்!

0
101

விராட் கோலியின் எனர்ஜிக்கு எதுவும் ஈடாகாது என்று பேட்டியளித்துள்ளார் டு ப்ளஸிஸ்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிக முக்கிய வீரராக இருந்து வந்த டூ ப்ளஸிஸ், 2022ம் ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் 7 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எடுக்கப்பட்டார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் பலர் வருத்தத்தில் இருந்தனர்.

ஆர் சி பி அணிக்கு சென்றதும் அவருக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது. கேப்டன் புறப்பட்ட முதல் வருடமே ஆர்சிபி அணியை பிளே-ஆப் சுற்றுக்குள் எடுத்துச் சென்றார்.

துவக்கத்தில், விராட் கோலி போன்ற வீரர் இருக்கும் அணியில், எப்படி டூ ப்ளஸிஸ் கேப்டன் பொறுப்பேற்று விளையாடவார்? என்ற பல சந்தேகங்கள் நிலவி வந்தது. ஆனால் இருவருக்கும் இடையே எந்தவொரு ஈகோவும் இல்லாமல் மிகச் சிறப்பான புரிந்துணர்வுடன் அணியை வழி நடத்தினர்.

சமீபத்திய பேட்டியில் ஆர்சிபி அணிக்கு கேப்டன் பொறுப்பு ஏற்றது குறித்தும், விராட் கோலியை வழிநடத்துவது குறித்தும் பேசியுள்ளார் டூ ப்ளசிஸ். அவர் கூறுகையில்,

“விராட் கோலி போன்ற மிகப்பெரிய ஆளுமைக்கு நிகராக நான் வர முடியாது. அதற்கு வரவேண்டும் என்று நான் நினைத்ததும் இல்லை. அணியில் ஆளுமை மிக்க வீரர்களை எப்படி வழி நடத்த வேண்டும் என்று நன்றாக நான் புரிந்திருக்கிறேன். ஆகையால் எங்களுக்குள் எந்தவித ஈகோவும் இல்லை.

அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொள்கிறேன். எங்களுக்குள் மிகச்சிறந்த நட்புணர்வு இருந்து வருகிறது. பல வருடங்கள் அவருக்கு எதிராக விளையாடிய அனுபவத்தில் கூறுகிறேன். அவரது எனர்ஜிக்கு நிகர் வேறு எதுவும் இல்லை. இது உலகம் அறிந்த உண்மை.

அவர் கேப்டன் பொறுப்பில் இருந்தாலும் இல்லை என்றாலும் அணி மீது அவர் காட்டும் அன்பு மற்றும் ஈடுபாடு அளப்பரியது. ஒவ்வொரு விக்கெட் விழும் பொழுதும் வீரர்களை எப்படி உற்சாகப்படுத்துவார் என்பதையும் நான் பார்த்தேன். எனக்கு புது அனுபவமாக இருந்தது. பல நேரங்களில் அவருக்கு நான் தலைவணங்க கடமைப்பட்டிருக்கிறேன். அவர் கிரிக்கெட் வீரர், அவர் ஒரு சூப்பர் மேன்.” என்றார்.