“எப்படிப்பட்ட ஆடுகளம் கொடுத்தாலும் விளையாடிதான் ஆகணும்!” – சூரியகுமார் தைரியமான பேட்டி!

0
479
Sky

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை தோற்ற நிலையில், தற்பொழுது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது!

இந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருக்க இரண்டாவது போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இந்த மைதானத்தின் ஆடுகளம் முழுக்க முழுக்க சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது.

- Advertisement -

டி20 கிரிக்கெட்டுக்கு இப்படியான ஆடுகளங்களை இந்த காலகட்டத்தில் பார்ப்பது மிகவும் அபூர்வமான ஒரு விஷயமாகும். பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்க மிகவும் சிரமப்பட்ட இந்த ஆடுகளம் குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிர்ச்சி அளிப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த ஆடுகள அமைப்பாளர் மாற்றப்பட்டு இருக்கிறார்.

இந்த ஆட்டம் மற்றும் இந்த ஆடுகளம் குறித்து பேசி உள்ள சூரியகுமார்
” எதிர்காலத்தில் எங்களுக்கு எப்படியான ஆடுகளங்கள் கிடைத்தாலும் அதில் நாங்கள் சிறப்பாக செயல்படவே முயற்சிப்போம். ஹர்திக் பாண்டியா நாங்கள் நீண்ட காலமாக பேட்டிங் செய்கிறோம். கடந்த காலத்திலும் நாங்கள் சில நல்ல பார்ட்னர்ஷிப்களை அமைத்துள்ளோம். இப்படியான நேரத்தில் நாங்கள் நல்ல தொடர்பில் இருப்பது அவசியம். கடைசி கட்ட ஓவரில் கொஞ்சம் பதட்டம் இருந்தது. அந்த நேரத்தில் நாங்கள் சிரிக்க முயற்சி செய்தோம். மேலும் யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் ஆட்டத்தை முடித்து விடுவதென ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டோம்!” என்று கூறியுள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” ஆடுகளம் எங்கள் கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ள ஒரு விஷயம். நீங்கள் எப்படியான ஆடுகளத்தில் விளையாடினாலும் பரவாயில்லை என்று நான் நினைக்கிறேன். இவையெல்லாம் நமது கட்டுப்பாட்டில் இல்லை. நமது கட்டுப்பாட்டில் இருப்பது ஒவ்வொரு ஆடுகளத்திலும் எப்படி விளையாட வேண்டும் என்பது மட்டும்தான். நாங்கள் கடந்த ஆட்டத்தில் அங்குள்ள சூழலுக்கு ஏற்ப எங்களை மாற்றி அமைத்துக் கொண்டு சரியாக விளையாடினோம்” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -