வீடியோ: “நோ-லுக் சிக்ஸ்” அடித்த சஞ்சு சாம்சன்; மொத்த வித்தையும் இறக்குறாரு மனுஷன்!

0
3108

நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிக்கு முன்னர் பயிற்சியில் ஈடுபட்டு வந்த சஞ்சு சாம்சன் நோ-லுக் சிக்சர் அடித்தது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

டி20 உலக கோப்பை முடிந்த கையோடு இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

உலக கோப்பையில் இடம்பெற்று இருந்த வீரர்கள் யார் யார் நியூசிலாந்து தொடரில் இருக்கிறார்களோ, அவர்கள் நேரடியாக நியூசிலாந்துக்கு சென்று விட்டனர். மற்ற வீரர்கள் மட்டும் நாடு திரும்பினர்.

இத்தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல் போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியா, ஒரு நாள் போட்டிகளுக்கு ஷிகர் தவான் இருவரும் கேப்டன் பொறுப்பேற்று விளையாடுகின்றனர்.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி வெலிங்டன் மைதானத்தில் நவம்பர் 18ஆம் தேதி மதியம் 12 மணியளவில் துவங்குகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டி20 உலக கோப்பையில் இடம்பெறாத சஞ்சு சாம்சன் நியூசிலாந்து தொடருக்கு எடுக்கப்பட்டிருக்கிறார். மீண்டும் தன்னை நிரூபித்து காட்ட ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதை பயன்படுத்திக் கொண்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

சாம்சன் பயிற்சி ஈடுபட்டபோது இரண்டு சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். ஆனால் சிக்சர் அடித்த பந்தை பார்க்காமல் கீழே குனிந்தபடியே இருந்தார். இதற்கு ‘நோ-லுக்’ ஷாட் என்று பெயர்.

சிறந்த பார்மில் இருக்கும் வீரர்கள் அதிக நம்பிக்கையுடன் அடிக்கும் ஷாட்டாக இருந்தால், பந்து சிக்ஸருக்கு தான் போகும் என்ற நம்பிக்கையில் அதை பார்க்க மாட்டார்கள். சஞ்சு சாம்சன் அப்படி அடித்தது பலருக்கும் நம்பிக்கையை தந்திருக்கிறது.

நியூசிலாந்து தொடரில் சாம்சன் நன்றாக செயல்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்திக் பாண்டியா மற்றும் சாம்சன் இடையே நல்ல புரிந்துணர்வு இருப்பதால் அவரை தொடர்ச்சியாக விளையாட வைப்பார் என்கிற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

வீடியோ: