கேஎல் ராகுல் வேண்டாம் இந்த வீரர்தான் சரியானவர் – முன்னாள் இந்திய துவக்க ஆட்டக்காரர் கருத்து!

0
102
K. L. Rahul

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்தது. அங்கு முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் விளையாடியது. இந்த ஒருநாள் தொடருக்கு இந்திய அணியின் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது!

ஒருநாள் தொடரில் கேப்டன் ஷிகர் தவானோடு 22 வயதான இளம் வீரர் வலதுகை பேட்ஸ்மேன் சுப்மன் கில் தொடக்க வீரராக களம் இறங்கினார். மூன்று போட்டிகளிலும் 64, 43, 98* இன்று மிகச் சிறப்பாக சீராக விளையாடி தொடர் நாயகன் விருதையும் பெற்றார்.

- Advertisement -

ஒருநாள் போட்டித் தொடரில் இடம் பெற்ற இவர் டி20 தொடரில் இடம் பெறவில்லை. அதேபோல் டி20 வடிவத்தில் நடைபெற உள்ள ஆசியக் கோப்பை தொடரிலும் இடம்பெறவில்லை. ஆனால் வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணியில் இடம் பிடித்து இருக்கிறார்.

இதே அணியில் ஆசிய கோப்பை அணியிலும் இடம் பிடித்துள்ள 20 வடிவத்தில் துவக்க வீரராக களமிறங்கும் கேஎல் ராகுல் இடம் பிடித்திருக்கிறார். தொடர் முடிந்து காயத்தால் நீண்ட ஓய்விற்குப் பிறகு வந்திருக்கும் கே எல் ராகுலுக்கு இந்தத் தொடர் ஒரு பயிற்சியாக அமையும் என்றுதான் அவர் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். ஆசிய கோப்பை தொடரில் துவக்க வீரராக களமிறங்க இருப்பதால், ஜிம்பாப்வே அணியுடனான தொடரிலும் அவர் துவக்க வீரராக களம் இறக்கப் படலாம்.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை வென்ற சுப்மன் கில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் துவக்க வீரராக களம் இறங்க முடியாமல் போகலாம். கருத்த தவானோடு கேஎல் ராகுல் துவக்க வீரராக களமிறங்கி அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

- Advertisement -

தற்போது இதுகுறித்து இந்திய டெஸ்ட் அணியின் தேவாங் காந்தி தனது கருத்தை கூறியிருக்கிறார். அவர் கூறும் பொழுது ” பாருங்கள் நம்பர் 3 என்பது
சரியான டாப் ஆர்டர் ஸ்லாட். அவர் இன்னிங்சில் புது பந்தின் சீக்கிரமாய் வந்து ஆட வேண்டியிருக்கும். பேட்டிங்கை திறப்பது போல் இருக்கும். ராகுலுக்கு போதுமான ஆட்டோ நேரம் கிடைத்தால் போதும் என்பது என் எண்ணம். ஒருநாள் போட்டிகளில் மீண்டும் கேஎல் ராகுல் மிடில் வரிசையில்தான் பேட்டிங் செய்வார். சுப்மன் கில் அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்காக தயாராகிறார். எனவே அவர் துவக்க வீரராக வருவதே சரி” என்று கூறியிருக்கிறார்.