எந்த சர்ச்சைகளும் விமர்சனங்களும் விராட் கோலியின் மன உறுதியை பாதிக்காது – தாய் உருக்கமான பேட்டி!

0
830
Viratkohli

இந்திய அணியின் ரன் மிஷின் விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் பார்ம் இழந்து தவித்து வந்தார். இந்நிலையில் அவர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அபாரமாக ஆடி தனது 44வது சதத்தை பூர்த்தி செய்தார் . இதன் மூலம் மூன்று வருடங்களாக ஒரு நாள் போட்டிகளில் சதம் அடிக்காமல் இருந்த தன்னுடைய மோசமான ஃபார்மை முடிவுக்கு கொண்டு வந்தார் .

பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் அபாரமாக ஆடிய விராட் கோலி 91 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து ஆட்டம் எடுத்தார்.இதில் 11 பௌண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடக்கம் .விராட் கோலி கடைசியாக 2019 ஆம் ஆண்டு இந்திய அணியின் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது தனது 43 வது ஒரு நாள் போட்டி சதத்தை பதிவு செய்தார். அதன் பிறகு மூன்று வருடங்களாக அவர் ஒரு நாள் போட்டியில் எந்த
சதத்தையும் பதிவு செய்யவில்லை.

- Advertisement -

இதனால் விராட் கோலியின் பார்ம் குறித்த சர்ச்சைகளும் விமர்சனங்களும் கிரிக்கெட் விமர்சகர்களாலும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களாலும் தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது இதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் விராட் கோலி அவரது ஸ்டைலின் மூலமே தன்னுடைய பேட்டையை கொண்டு பதில் சொல்லியுள்ளார். பங்களாதேஷ் அணிக்கு எதிராக அவர் அடித்த 44 வது சதத்தின் மூலம் தன்னுடைய விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் .

இதுகுறித்து பேசியுள்ள விராட் கோலியின் தாயார் சரோஜினி கோலி அவர்கள் “விராட் கோலி இளம் வயது முதலே மன உறுதியான வீரர் என்றும் எந்தவிதமான விமர்சனமோ அல்லது சர்ச்சையோ அவருடைய இலக்கில் இருந்து அவரை ஒருபோதும் மாற்ற முடியாது” என்று தெரிவித்துள்ளார் .

இது குறித்து பேசி உள்ள விராட் கோலியின் தாயார் அவரது மன உறுதிக்கு சான்றாக விராட் கோலி தந்தையின் இறப்பு சம்பவத்தை நினைவு படுத்தி உள்ளார். அப்போது பேசிய அவர் “விராட் கோலி அன்றைய தினம் கர்நாடக அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் ஆடிக் கொண்டிருந்தான் 40 ரன்கள் உடன் ஆடிக் கொண்டிருந்தவன் அன்றைய ஆட்டநேர முடிவுக்கு பின் வீடு திரும்பினான் . ஆட்டத்தின் களைப்பின் முன்னதாகவே உறங்கி விட்டான். அன்று அதிகாலை இரண்டு முப்பது மணி அளவில் அவரது தந்தை இயற்கை எய்த்தியதை அடுத்து தனது பயிற்சியாளர் உடன் கலந்தாலோசித்த கோலி தந்தையின் கனவை நிறைவேற்றுவதற்காக மறுநாள் போட்டியில் ஆடி அணியை தோல்வியில் இருந்து மீட்டு அதன்பின் அவரது தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார் என்று தெரிவித்தார் .

- Advertisement -

இதனால் கோலியை எந்தவிதமான சர்ச்சையோ இல்லை விமர்சனங்களோ அவருடைய மன வலிமையை பாதிக்காது என்று குறிப்பிட்ட அவரது தாயார் இன்னும் அவர் இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடி பல வெற்றிகளையும் சாதனைகளையும் பெற்று தருவார் என்று கூறி முடித்தார்