ஒருநாள் போட்டியில் நேரம் எடுக்கலாம் இங்க நோ சான்ஸ்! – தொடர் நாயகன் சூர்யா அதிரடி!

0
1385
Sky

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 கள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது இதில் முதல் கட்டமாக டி20 தொடர் கடந்த பதினெட்டாம் தேதி துவங்கியது முதல் டி20 போட்டி முழுவதுமாக மழையினால் பாதிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது .

இன்று மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது . இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்த அணி 161 ரன்கள் இந்தியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்த இலக்கை துரத்தி ஆடிய இந்திய அணி ஒன்பது அவர்களின் 75 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்த பொழுது மழை குறுக்கிட்டதால் டி எல் எஸ் விதிகளின்படி போட்டி சமத்தில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது

இதனால் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது .
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தொடர் நாயகன் விருது பெற்ற சூரியகுமார் யாதவ் ” i என்னுடைய பேட்டிங் மற்றும் அணியின் முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சியாக உணர்கிறேன் . இந்தப் போட்டி ஒரு முழு போட்டியாக நடந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் . இருந்தாலும் நாங்கள் தொடர்ந்து கைப்பற்றியதில் மகிழ்ச்சி தான் என்று கூறினார் .

மேலும் அவர் ” தட்பவெப்ப நிலை மற்றும் காலநிலை ஆகியவை நம் கைகளில் இல்லை “, என்றும் தெரிவித்தார் . சர்வதேச கிரிக்கெட் ஆடும் பொழுது அழுத்தம் என்பது இயல்பாக இருக்கக்கூடிய ஒன்றுதான் இருந்தாலும் நாம் விளையாடக்கூடிய போட்டிகளை எனக்கு அனுபவித்து மகிழ்ந்து விளையாட வேண்டும் அப்படித்தான் நான் என் பேட்டிங்கை ரசித்து ஆடிக் கொண்டிருப்பதாக கூறினார் ..

ஒரு நாள் போட்டிகளில் அவருடைய அணுகுமுறை பற்றி கேட்டதற்கு ஒரு நாள் போட்டிகளில் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்வேன் ஆனால் என்னுடைய அணுகுமுறை எப்பொழுதும் தாக்குதல் பாடியாகத்தான் இருக்கும் என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று கூறினார் . மேலும் அவர் இந்த போட்டி ஒரு முழுமையான போட்டியாக நடந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் ஆனால் அது நம் கைகளில் இல்லை என்று கூறி எனது பேட்டியை முடித்துக் கொண்டார் .