பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் நடராஜன் இடம்பெறாததற்கு இதுதான் காரணம்

0
18481
No BCCI contract for Natarjan BCCI contract

இந்திய கிரிக்கெட் வாரியம் வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த ஒப்பந்தம் என்னவென்றால் எதேனும் ஒரு வீரர் குறைந்தது 3 டெஸ்ட் போட்டிகள் அல்லது 7 ஒருநாள் போட்டிகள் பங்கேற்றிருக்க வேண்டும். அப்படி பங்கேற்றிருந்தால் பிசிசிஐ சார்பாக அவருக்கு ஊதியம் வழங்கப்படும்.

ஆனால் இந்த ஆண்டு பிசிசிஐ நிர்வாகம் வருடாந்திர ஒப்பந்தத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதாவது ஒரு வீரர் குறைந்தது 10 டி20 போட்டிகளில் பங்கேற்று இருந்தால் போதும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

- Advertisement -

சென்ற ஆண்டு வரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டது. இருப்பினும் சென்ற ஆண்டு வாஷிங்டன் சுந்தர் டி20களில் மிகச் சிறப்பாக செயல்பட்டதற்காக பிசிசிஐ நிர்வாகம் அவரைப் பாராட்டும் வகையில் அவருக்கு ஒப்பந்தம் அளித்து கவுரவப்படுத்தியது.

ஐ.பி.எலில் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்குத் தகுதிப் பெற்ற தமிழக வீரர் நடராஜனின் பெயர் அந்த ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் நடராஜன் 1 ஒருநாள் போட்டி, 1 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்றார்.

பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் 1 டி20 மற்றும் 1 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடினார். மொத்தமாக நடராஜன் 1 டெஸ்ட், 2 ஒடிஐ மற்றும் 4 டி20களில் மட்டுமே ஆடி உள்ளார்.

- Advertisement -

பிசிசிஐ புதிதாக அளித்துள்ள ஒப்பந்த விதியை அவர் நிறைவு செய்யவில்லை என்பதால் தான் நட்ராஜானின் பெயர் ஒப்பந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தப் பட்டியல் நான்கு வகைகளாக பிரிக்கப்படுகிறது. ஏ+ பிரிவு என்றால் வருடத்திற்கு 7 கோடி வாங்கும் வீரர்கள். விராட் கோஹ்லி, ரோஹித் ஷர்மா மற்றும் பும்ரா அதில் இடம் பெற்றுள்ளனர்.

அதற்குப் பின்னர் ஏ பிரிவு என்றால் 5 கோடி, பி பிரிவு என்றால் 3 கோடி, சி பிரிவு என்றால் 1 கோடி வழங்கப்படும். மற்றொரு தமிழக நட்சத்திரம் வாஷிங்டன் சுந்தர் இம்முறை சி பிரிவில் இடம்பெற்றுள்ளார்.

இரு கிரிக்கெட் வீர்ரகள் கேதார் ஜாதவ் மற்றும் மனிஷ் பாண்டே பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். புதிதாக முஹம்மது சிராஜ், ஷுப்மன் கில் மற்றும் அக்ஷர் பட்டேல் இடம்பெற்றுள்ளனர்.