அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நான் மீண்டும் வருகிறேன் ; இந்த அணிக்காக கோப்பை வெல்லும்வரை நான் ஓய மாட்டேன் – கிறிஸ் கெயில் கம்பேக்

0
3166
Chris Gayle

50 ஆண்டுகள் கழித்து ஐபிஎல் தொடரை பற்றிய பேச்சு எழுந்தாலும் அதில் கிறிஸ் கெயில் பெயர் நிச்சயம் இடம்பெறும். அந்த அளவுக்கு அவரது தாக்கம் ஐபிஎல் தொடரில் இருந்து இருக்கிறது. ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் 2009 முதல் 2010ஆம் ஆண்டு வரை கொல்கத்தா அணியில் விளையாட தொடங்கிய அவர்,பின்னர் பெங்களூரு அணியில் 2011 முதல் 2017ஆம் ஆண்டு வரை விளையாடினார். பின்னாடி 2018 முதல் கடந்த ஆண்டு வரை பஞ்சாப் அணியில் அவர் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா அணிக்கு 16 போட்டிகளில் விளையாடி 463 ரன்கள் குவித்திருக்கிறார். பெங்களூரு அணிக்கு 85 போட்டிகளில் விளையாடி 3163 ரன்கள் குவித்திருக்கிறார். பஞ்சாப் அணிக்கு 41 போட்டிகளில் விளையாடி 1339 ரன்கள் குவித்திருக்கிறார். ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் அவர் 142 போட்டிகளில் 4965 ரன்கள் குவித்திருக்கிறார். மொத்தமாக 6 சதங்கள் மற்றும் 31 அரை சதங்கள் அதில் அடங்கும். ஐபிஎல் தொடரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 39.72 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 148.96 ஆகும்.

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு வருடமும் தன்னுடைய அதிரடி ஆட்டத்தின் மூலமாக இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து ரசிகர்களையும் கிறிஸ் கெயில் சந்தோஷப்படுத்துவார். முதன்முறையாக கிறிஸ் கெய்ல் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கு கொள்ளவில்லை.

அவ்வளவுதான் இனி அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். அவர்கள் வருத்தத்தைப் போக்கும் விதமாக தற்போது கிறிஸ் கெயில் அதிகாரப்பூர்வமாக ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

அடுத்த ஆண்டு மீண்டும் களமிறங்க போகிறேன்

“அடுத்த ஆண்டு நான் மீண்டும் ஐபிஎல் தொடரில் களம் இறக்க போகிறேன். என்னுடைய சேவை அவர்களுக்கு தேவை. அவர்களுக்கு நான் தேவைப்படுகிறேன். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கான விளையாடி இருக்கிறேன். இதில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளில், ஏதேனும் ஒரு அணியில் இடம் பெற்று விளையாட ஆசைப்படுகிறேன்.

இந்த இரு அணிகளில் ஏதேனும் ஒரு அணியில் விளையாடி ஐபிஎல் கோப்பையை வெல்ல ஆசைப் படுகிறேன்”, இன்று கிறிஸ் கெயில் தற்பொழுது கூறியுள்ளார்.

கிறிஸ் கெய்ல் கூறியபடி அடுத்த ஆண்டு அவர் ஐபிஎல் தொடரில் அவர் விரும்பிய அணிகளான பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளில் ஏதேனும் ஒரு அணியில் இடம் பெற்று விளையாடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.