முதல் டி20 ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி ; தவறான அணி தேர்வால் இந்திய அணி தோல்வியா?

0
2340
IndvsNz

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியிடம் இழந்தது!

இதையடுத்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி உடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மைதானத்தில் விளையாடியது!

- Advertisement -

இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இந்திய அணியில் இடம் பெற்ற பிரித்விஷாவுக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை!

நியூசிலாந்து துவக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக இன்னிங்சை துவக்கி இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை மிரட்டினர். இதற்கு அடுத்து வந்த சுற்பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் பின் ஆலன் மற்றும் சாப்மேன் இருவரது விக்கட்டையும் வீழ்த்தினார்.

ஆனாலும் ஒரு முனையில் நின்ற துவக்கா ஆட்டக்காரர் கான்வோ அதிரடியாக விளையாடி 35 பந்தியில் 52 ரன்கள் எடுத்தார். டேரில் மிட்சல் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். அர்ஸ்தீப் சிங் கடைசி ஓவரில் 27 ரன்களை விட்டுத் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முடிவில் நியூசிலாந்து அணி ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இதையடுத்து களம் கண்ட இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இசான் கிசான் 4, கில் 7, ராகுல் த்ரிபாதி 0 என வெளியேற இந்திய அணி நெருக்கடியில் விழுந்தது. அடுத்து இணைந்த ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினாலும் அவர்களால் நிலைக்க முடியவில்லை. இருவரும் முறையே 21, 47 ரன்களில் வெளியேறினார்கள்.

ஒரு முனையில் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தாலும், இந்திய அணியின் வெற்றிக்கனவு தகர்ந்தது. முடிவில் இந்திய அணி ஒன்பது விக்கட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுக்க நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் தற்போது முன்னிலை வகிக்கிறது.

ஜார்க்கண்ட் ராஞ்சி மைதானம் சுழற் பந்துவீச்சுக்கு ஏற்றது. ஆனால் இந்திய அணியில் ஒரு வேகப்பந்துவீச்சாளர் அதிகமாக சேர்க்கப்பட்டிருந்தார். மேலும் பகுதி நேர சுழற் பந்துவீச்சாளரான தீபக் ஹூடா நான்கு ஓவர்கள் வீச வாய்ப்பு இருந்தும் அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. இப்படியான காரணங்களால் இந்திய அணிக்கு இந்த தோல்வி வந்திருக்கிறது என்று பரவலாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகிறது!