நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு ; அதிரடி இளம் வீரர் அணியில் சேர்ப்பு!

0
24076
ICT

நியூசிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணி இந்த மாதம் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாட இருக்கிறது.

இதில் முதலில் டி20 தொடர் நடக்க இருக்கிறது இதன் முதல் போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் ஜனவரி 18ஆம் தேதி துவங்குகிறது.

நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி தற்பொழுது அறிவிக்கப்பட்டு உள்ளது. டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருக்கிறார். ஒரு நாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருக்கிறார்.

டி20 இந்திய அணி :

ஹர்திக் பாண்டியா கேப்டன், சூரியகுமார் யாதவ் துணை கேப்டன், இஷான் கிஷான், ருதுராஜ், பிரிதிவி ஷா, கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜித்தேஷ் ஷர்மா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், சாகல், அர்ஸ்தீப், உம்ரான் மாலிக், சிவம் மாவி, முகேஷ் குமார்.

ஒருநாள் போட்டி இந்திய அணி :

ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ், கே எஸ் பரத், ஹர்திக் பாண்டியா , சூரியகுமார் யாதவ், இஷான் கிஷான், கில், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஷ் அகமத், குல்தீப் யாதவ், சாகல், சர்துல் தாகூர், உம்ரான் மாலிக், முகமது சிராஜ், முகமது சமி.