ஆஸ்திரேலியாவை புரட்டி எடுத்தது நியூசிலாந்து; பல காட்சிகளை மாற்றப்போகும் முதல் வெற்றி!

0
1309
Aus vs Nz

எட்டாவது டி20 உலக கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே சிட்னி மைதானத்தில் நடைபெற்று முடிந்திருக்கிறது!

இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக நியூசிலாந்து அணிக்கு களமிறங்கிய டெவோன் கான்வே மற்றும் பின் ஆலன் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை மைதானத்தில் நாலாபுறங்களிலும் சிதறடித்தார்.

ஆட்டத்தின் முதல் ஓவரில் இருந்து அதிரடியை வெளிப்படுத்திய பின் ஆலன் 16 பந்துகளில் 42 ரன்களை 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்களுடன் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கான்வோ இறுதி வரை ஆட்டமிழக்காமல் 58 பந்துகளில் 92 ரன்களை 7 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் எடுத்தார். ஜிம்மி நீசம் கடைசி கட்டத்தில் 13 பந்துகளில் 26 ரன்கள் 2 சிக்சர்களுடன் எடுக்க, நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் குவித்தது.

இதற்கு அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நடந்தது எல்லாமே மிகப் பெரிய அதிர்ச்சிதான். அந்த அணியில் மேக்ஸ்வெல் அடித்த 28 ரன்தான் அதிகபட்ச ரன். 17.1 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 111 ரன்களுக்கு சுருண்டது. நியூசிலாந்து அணி 89 ரன்கள் என்ற மிகப் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சவுதி 3 விக்கெட்டுகள், மிச்செல் ஸ்டார்க் நேர் 3 விக்கெட்டுகள் மற்றும் டிரென்ட் போல்ட் 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள். ஆஸ்திரேலிய அணி இந்த ஆட்டத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருப்பதால், ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியுடன் மோதும் போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. இந்த உலக கோப்பையின் முதல் போட்டியே மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது!

நாளை இந்த எட்டாவது டி20 உலக கோப்பையில் மிக முக்கியமான ஆட்டம் ஒன்று நடக்க இருக்கிறது. அந்த ஆட்டம் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டம். இந்தப் போட்டி மழையால் தடைபட அதிக வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால் இன்றைய ஆஸ்திரேலியா நியூசிலாந்து போட்டியும் மழையால் பாதிக்கப்பட 90% வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. அப்படி எதுவும் ஆனால் நடக்கவில்லை. நாளைய போட்டியும் இதேபோல் நடந்தால் பி பிரிவிலும் பெரிய மாற்றங்களுக்கு வாய்ப்பிருக்கிறது!