இந்தியாவிற்கு எதிரான தொடரின் புதிய நேர அட்டவணையை வெளியிட்டதுள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம்

0
2198
IND vs SL New Timings

இலங்கையை சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளிலும் 3 டி-20 போட்டிகளிலும் விளையாடவுள்ளது.இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியார் கிராண்ட் ஃப்ளவருக்கு கடந்த வியாழன் அன்று கோவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவரை தொடந்து வீடியோ ஆய்வாளர் ஜி.டி. நிரோஷனிற்கு வெள்ளிக்கிழமை அன்று கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்படிருக்கிறது . இதனால் பயிற்சி முகாமில் கடந்த ஐந்து நாட்களாக கோவிட்-19 தொற்று பரவலாக இருக்கின்ற சூழ்நிலையில் தனிமைப்படுத்துதலுக்கு சற்று காலம் தேவைப்படுவதன் காரணமாக இந்த மாற்றத்தை ஏற்ப்படுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியும் தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை  அணியும் மோதுகின்றனர்.  அனுபவமற்ற வீரர்களுடன் களமிறங்க காத்திருக்கும்  இந்திய அணிக்கு தலைமை பயிர்ச்சியாளராக இந்திய அணியின் சுவர் என்றைழைக்கப்படும் ராகுல் டிராவிட் பொறுப்பேற்றுள்ளார் . ராகுல் டிராவிட்டின் வருகை இளம் வீரர்களுக்கு மட்டுமின்றி ஷிகர் தவான் ஹர்டிக் பாண்டியா புவனேஸ்வர் குமார் போன்ற முன்னணி வீரர்களுக்கும்  பெரிய பலமாக இருக்கும் என்பதில் ஆச்சர்யமில்லை. அதே சமயம்  சமீப காலமாக தங்களின்  மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வரும் இலங்கை கிரிக்கெட் அணி தங்களை மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

புதிய நேர அட்டவணை

இந்த தொடருக்கான பழைய நேர அட்டவணையை மாற்றி புதிய நேர அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பிற்பகல் 2.30 மணிக்குய் தொடங்கவிருந்த ஒருநாள் போட்டிகள் தற்போது பிற்பகல் 3 மணியளவிலும் இரவு 7 மணியளவில் தொடங்கவிருந்த டி-20 போட்டிகள் இரவு 8 மணியளவிலும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

Team India vs Srilanka
Photo: BCCI

அனுபவமற்ற இந்திய அணியுடன் இலங்கை அணி   3 ஒருநாள் போட்டிகளிலும் 3 டி-20 போட்டிகளிலும் விளையாடவுள்ளது . ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்  ஜூலை 18 முதல் துவங்குகிறது. அதே போன்று மூன்று டி-20 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடர் ஜூலை 25 முதல் துவங்குகிறது. ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகள் அனைத்தும் கொழும்பு  ஆர் பிரேமதாச மைதானாத்தில் நடைப்பெறவிருக்கிறது. பார்வையாளர்கள் கடந்த இரண்டு வாரங்களாக 20 நபர் கொண்ட தங்கள் அணியின் பயிற்சி ஆட்டங்களை பார்த்து வருகின்றனர் . இந்திய இலங்கை ஆட்டங்களுக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்னும் அறிவிக்கவில்லை

இப்போட்டியின் நேரடி ஒளிப்பரப்பு சோனி சிக்ஸ் HD/SD, சோனி டென் 3 HD/SD மற்றும் துதர்ஷன் காணலாம். மேலும் ரசிகர்கள் சோனி லைவ்-லும் காணலாம்.