திடீரென்று பைனல் மற்றும் செமி பைனலுக்கு மாற்றப்பட்ட விதி; என்ன மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது?!

0
2553
T20wc22

எட்டாவது டி20 உலக கோப்பை அக்டோபர் 16ஆம் தேதி துவங்கி ஆஸ்திரேலியாவில் தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 13 ஆம் தேதி மெல்போன் மைதானத்தில் நடக்க இருக்கிறது!

இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா இங்கிலாந்து நியூசிலாந்து தென் ஆப்பிரிக்கா ஆகிய எட்டு அணிகள் இந்த உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாகத் தகுதி பெற்றன.

- Advertisement -

இலங்கை அயர்லாந்து ஜிம்பாப்வே நெதர்லாந்து ஆகிய நான்கு அணிகள் தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடி அதன் மூலம் பிரதான சுற்றுக்குத் தகுதி பெற்றன.

ஆஸ்திரேலியா இங்கிலாந்து நியூசிலாந்து இலங்கை ஆப்கானிஸ்தான் அயர்லாந்து ஆகிய ஆறு அணிகள் ஒரு குழுவிலும், இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் தென் ஆப்பிரிக்கா ஜிம்பாப்வே நெதர்லாந்து ஆகிய ஆறு அணிகள் இன்னொரு குழுவிலும் இடம் பெற்றன.

இந்த இரண்டு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நான்கு அணிகளை கொண்டு அரையிறுதி போட்டிகள் நடத்தப்பட்டு அதிலிருந்து இறுதி போட்டியின் மூலம் சாம்பியன் அணி தேர்ந்தெடுக்கப்படும்.

- Advertisement -

தற்பொழுது ஏறக்குறைய 80 சதவீத ஆட்டங்கள் முடிந்துவிட்ட நிலையில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு திடீரென்று விதிகள் மாற்றப்பட்டு இருக்கின்றன.

அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் அதற்கு இன்னொரு நாள் கூடுதலாக ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது மேலும் இந்த இரண்டு போட்டிகளுக்கும் ஆட்டத்தின் முதல் பகுதியோ அல்லது இரண்டாம் பகுதியோ பத்து ஓவர்கள் முடிவடையாத நிலையில், ஆட்டத்தின் முடிவு அறிவிக்கப்படாது என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

அதாவது ஒரு அணி முதலில் விளையாடும் பொழுது பத்து ஓவர்கள் முடிந்திருந்தால் தான், ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டாலும் அடுத்து விளையாடும் அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும். அதேபோல் முதல் பாதி ஆட்டம் 20 ஓவர்கள் நடைபெற்று இருந்தாலும், இரண்டாவது பாதி ஆட்டம் 10 ஓவர்கள் ஆவது நடந்திருக்க வேண்டும். அப்படி நடந்திருக்கும் பட்சத்தில் தான் டக்வோர்த் லீவிஸ் விதிப்படி முடிவுகள் மேற்கொள்ளப்படும். இல்லையென்றால் போட்டி புதிதாக அடுத்த நாள் நடைபெறும்.

முன்பு இந்த விதிமுறை எப்படி இருந்தது என்றால் ஒரு அணி ஐந்து ஓவர்கள் ஆடி இருந்தால் போதும் என்கின்ற அளவில் தான் இருந்தது. இது பெரும்பாலும் இரண்டாவது பேட் செய்யும் அணிக்கே சாதகமாகவும் அமையும். தற்பொழுது ஐந்து ஓவர்கள் என்பது பத்து ஓவர்களாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது இதற்கான ட்விட்டர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.