புதிய சரித்திரம்.. 23 வயது இந்திய வம்சாவளி ரச்சின் ரவீந்தரா வரலாற்று சாதனை.. பட்டைய கிளப்பும் இளம் சூறாவளி,

0
1234
Rachin

இன்று உலகக்கோப்பை தொடரில் தரம்சாலா மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி மிகவும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு 59 பந்துகளில் அதிரடியாக டிராவிஸ் ஹெட் சதம் அடித்தார். டேவிட் வார்னர் தன் பங்குக்கு அதிரடியாக 63 பந்துகளுக்கு 81 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணி நானூறு ரன்கள் எட்டும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 388 ரன்கள் குவித்தது.

இந்த இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய நியூசிலாந்து அணிக்கு, அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் வில் யங் 32 மற்றும் டெவோன் கான்வே 28, டேரில் மிட்சல் 54, டாம் லாதம் 21, பிலிப்ஸ் 12 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

இந்த நிலையில் ஒரு முனையில் நின்று மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த ரச்சின் ரவீந்தரா மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். சூழ்நிலைக்கு ஏற்ப அதிரடியாக விளையாடிய அவர் முதலில் அரை சதத்தை கடந்தார்.

- Advertisement -

இதற்குப் பிறகு வேகத்தை அதிகரித்த அவர் 77 பந்துகளில் தன்னுடைய இரண்டாவது சதத்தையும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை சதத்தையும் பதிவு செய்தார். இறுதியாக 89 பந்துகளில், ஒன்பது பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 116 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்திருக்கிறார்.

நியூசிலாந்து தரப்பில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் மிகக் குறைந்த வயதில் இரண்டு சதங்கள் அடித்த வீரர் என்ற அரிய சாதனையை, 23 வயதான இந்திய வம்சாவளி வீரர் ரச்சின் ரவீந்திரா தற்பொழுது படைத்திருக்கிறார்.

மேலும் உலகக் கோப்பையில் 23 வயதில் இரண்டு சதங்கள் அடித்ததில் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து இருக்கிறார்!

இதற்கு முன்பு நடப்பு உலகக் கோப்பை துவக்க போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆட்டம் இழக்காமல் அபாரமான சதம் அடித்திருந்தார். தற்பொழுது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மிக முக்கியமான அழுத்தம் நிறைந்த போட்டியில் அடித்திருக்கிறார். உலக கிரிக்கெட்டில் இவருக்கு சிறப்பான இடம் இருக்கிறது.